ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் உருவாகவுள்ள படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இயக்குனர் ஷங்கர் அடுத்ததாக நடிகர் ராம் சரண் வைத்து ஒரு புதிய திரைப்படம் இயக்கவுள்ளார். இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், இந்த திரைப்படம் தமிழ் , தெலுங்கு,இந்தி ஆகிய மொழிகளில் உருவாகிறது. இந்த படத்தில் மற்றொரு டாப் ஹீரோவும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆம், மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இந்த படத்தில் முதலில் பவன் கல்யாண் முக்கிய வேடத்தில் நடிக்க வைக்க தேர்வு செய்திருந்ததாகவும் ,தற்போது அந்த வேடத்தில் மற்றொரு டாப் நடிகர் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில் தற்போது அதனை தொடர்ந்து இந்த படத்தில் நடிகர் ராம் சரணுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்கான படப்பிடிப்பு 5 மாதம் கழித்து தொடங்கவுள்ளது. மேலும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் தமிழில் சுல்தான் திரைப்படம் வருகின்ற ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
காஞ்சிபுரம் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் இன்று…
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி…
சத்தீஸ்கர்: சத்தீஸ்கரின் முங்கேலி மாவட்டத்தில் இரும்பு ஆலையில் புகைபோக்கி இடிந்து விழுந்ததில் சில தொழிலாளர்கள் காயமடைந்தனர் என்றும், பலர் விபத்தில்…
ஹைதராபாத்: ஹைதராபாத்தின் செர்லப்பள்ளி பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக, அதிநவீன வசதிகளுடன் கூடிய 'ஸ்லீப்பிங் பாட்'…
சென்னை : தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருத்துக்கள் தற்போது…
ஆந்திரப் பிரதேசம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்விற்கான இலவச தரிசன டோக்கன்களை வாங்க, நேற்று இரவு அதிகளவில்…