என்ஜாய் எஞ்சாமி பாடலுக்கு நடனமாடும் ராஷி கண்ணா…!!
என்ஜாய் எஞ்சாமி பாடலிற்கு நடனம் செய்து வீடியோவை ராஷிகண்ணா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தயாரிப்பில் அவரது மகள் மற்றும் பாடகியான தீ மற்றும் அறிவு இருவரும் இணைந்து பாடிய பாடல் என்ஜாய் எஞ்சாமி. இந்த பாடல் கடந்த மார்ச் மாதம் 7 ஆம் தேதி வெளியானது. வெளியான சில நாட்களில் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. தமிழ் நாட்டின் பாரம்பரியமான இசையான பறையை வைத்து பாடலை உருவாக்கியுள்ளனர்.
இந்த பாடல் தற்போது வெளியாகி 1 மாதங்கள் கூட ஆகவில்லை ஆனால் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. மேலும் இந்த பாடலிற்கு பல நடிகர்கள், நடிகைகள் நடனம் செய்து வீடியோவை வெளியிட்டு வருகின்றார்கள். அந்த வகையில் பிரபல நடிகையான ராஷி கண்ணா பாடலிற்கு நடனம் செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
View this post on Instagram