நடிகை ராஷி கன்னாவிற்கு பிடித்த நடிகர் தல அஜித்தா தளபதி விஜயா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
ராஷி கன்னா தமிழ் சினிமாவில் கடந்தாண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த படத்தில் இவர் நடிகர் அதர்வா முரளிக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதனையடுத்து தமிழில் அயோக்யா, சங்கதமிழன் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். அதன் பின்னர் பல தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார். கடந்த மாதம் இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் வேல்ட் ஃபேமஸ் லவ்வர். இந்த படத்தை கிராந்தி மாதவ் இயக்கினார். மேலும், இவருடன் விஜய் தேவரகொண்டா, கேத்ரின் தெரசா , ஐஸ்வர்யா ராஜேஷ், இசபெல் லைட் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெறவில்லை.
தற்போது ஊரடங்கு காரணமாக பல பிரபலங்கள் ரசிகர்களிடம் உரையாடல் நடத்தி நேரத்தை செலவிடட்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்றைய தினம் டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடி உள்ளார். அவ்வப்போது ரசிகர் ஒருவர் தமிழ் சினிமாவில் உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என்று கேட்க, அவர் விஜய் என்று பதிலளித்துள்ளார். மேலும் தல அஜித்தை குறித்து ஒரு வார்த்தையில் கூற ரசிகர் கேட்கையில் Charming என்று பதிலளித்துள்ளார். தற்போது இந்த பதிவிற்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடும் வீரர்கள், சர்வதேச போட்டிகள் விளையாடும் நாட்களை தவிர்த்து இடையில் உள்ளூர் போட்டிகளான…
கோவை : மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையின் ஒரு பகுதியில் இந்து மத கடவுள் முருகன் கோயில், காசி விஸ்வநாதர்…
சென்னை : சென்னையில் நேற்று 1 சவரன் ரூ.680 குறைந்து ரூ.61,640க்கு விற்பனையான நிலையில், இன்று புதிய உச்சத்தை எட்டியுள்ளது.…
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது. ஈரோடு கிழக்கு…
சென்னை : சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் பனி மூட்டம் நீடிக்கும் என சுயாதீன வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான 5வது மற்றும் இறுதி டி20 போட்டியின் போது, சஞ்சுவுக்கு காயம்…