ராஷி கன்னாவிற்கு பிடித்த நடிகர் தலயா தளபதியா ..!

Default Image

நடிகை ராஷி கன்னாவிற்கு பிடித்த நடிகர் தல அஜித்தா தளபதி விஜயா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார். 

ராஷி கன்னா தமிழ் சினிமாவில் கடந்தாண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த படத்தில் இவர் நடிகர் அதர்வா முரளிக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதனையடுத்து தமிழில் அயோக்யா, சங்கதமிழன் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். அதன் பின்னர் பல தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார். கடந்த மாதம் இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் வேல்ட் ஃபேமஸ் லவ்வர். இந்த படத்தை கிராந்தி மாதவ் இயக்கினார். மேலும், இவருடன் விஜய் தேவரகொண்டா, கேத்ரின் தெரசா , ஐஸ்வர்யா ராஜேஷ், இசபெல் லைட் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெறவில்லை. 

தற்போது ஊரடங்கு காரணமாக பல பிரபலங்கள் ரசிகர்களிடம் உரையாடல் நடத்தி நேரத்தை செலவிடட்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்றைய தினம் டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடி உள்ளார். அ‌வ்வ‌ப்போது ரசிகர் ஒருவர் தமிழ் சினிமாவில் உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என்று கேட்க, அவர் விஜய் என்று பதிலளித்துள்ளார். மேலும் தல அஜித்தை குறித்து ஒரு வார்த்தையில் கூற ரசிகர் கேட்கையில் Charming என்று பதிலளித்துள்ளார். தற்போது இந்த பதிவிற்கு  லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்