அமெரிக்காவில் உள்ள ஒரு பெண் வீட்டில் இரண்டு தலை கொண்ட அரியவகை பாம்பு..!
அமெரிக்காவில் உள்ள ஒரு பெண் வீட்டில் இரண்டு தலை கொண்ட அரியவகை பாம்பு ஒன்று, கண்டறியப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் வசிக்கும் பெண்மணி ஒருவர், தனது வீட்டில் பூனை ஒன்றை வளர்த்து வந்துள்ளார். அந்த பூனை, எதையோ இழுத்து வருவதை கவனித்த அவர், அது இரண்டு தலை கொண்ட அரியவகை பாம்பு என்று தெரியவந்தது. இதுகுறித்து அமெரிக்கா மீன் மற்றும் வனவிலங்கு ஆராய்ச்சி நிறுவனம் கூறுகையில், “இரண்டு தலைகள் பாம்புகள் காடுகளில் உயிர்வாழ வாய்ப்பில்லை. ஏனெனில் இரண்டு மூளைகளும் வெவ்வேறு முடிவுகளை எடுப்பதால் அவை வேட்டையாடுபவர்களிடமிருந்து உணவளிக்கும் அல்லது தப்பிக்கும் திறனைத் தடுக்கின்றன” என்று கூறியுள்ளனர்.