அஸ்ட்ரா செனகா தடுப்பூசியால் அரிதான நரம்பு கோளாறு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு..!
அஸ்ட்ரா செனகா தடுப்பூசியால் அரிதான நரம்பு கோளாறு பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஐரோப்பிய மருந்து கட்டுப்பாட்டு கழகம் தெரிவித்துள்ளதாவது, அஸ்ட்ரா செனகா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு அரிதான நரம்பு கோளாறு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியால் நரம்பு மண்டலம் பாதிக்கப்படுவதை குறிக்கும் இந்த நோய் ‘கில்லென்-பார்ஸ் சிண்ட்ரோம்’ என்று அழைக்கப்படுகிறது.
இந்த பாதிப்பு கொரோனா தடுப்பூசிகளான அஸ்ட்ரா செனகா, ஜான்சன் அண்ட் ஜான்சன், மாடர்னா ஆகிய தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு அரிதாக ஏற்பட வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளது. கடந்த ஜூலை 31 ஆம் தேதி வரை உலகம் முழுவதும் 59.2 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.
இதில் 833 பேருக்கு இந்த நரம்பு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த தடுப்பூசியால் ஏற்படும் கோளாறு ‘வாக்ஸ்செர்வியா’ என்று அழைக்கப்படுகிறது.