நடிகர் விஜய் சேதுபதி மகளுக்கு சமூக வலைத்தளம் மூலம் பாலியல் வன்கொடுமை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் சேதுபதி இலங்கையின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படமான “800” என்ற படத்தில் நடிப்பதாக இருந்தது .ஆனால் இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதாவது,முரளிதரன் இலங்கை நடைபெற்ற போராட்டத்தில் இலங்கை அரசுக்கு ஆதரவாக செயல்பட்டவர் என்ற தமிழகத்தில் பலரும் குற்றம்சாட்டி வந்தனர்.
இதனிடையே முத்தையா முரளி தரன் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.அந்த அறிக்கையில், வருங்காலங்களில் தேவையற்ற தடைகள் ஏற்படாமல் இருக்க விஜய்சேதுபதி 800 திரைபடத்தில் இருந்து விலகி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். முத்தையா முரளி தரன் அறிக்கையை மேற்கோள்காட்டி நடிகர் விஜய் சேதுபதி ,தனது ட்விட்டர் பக்கத்தில் ,நன்றி ..வணக்கம் என பதிவிட்டார்.
பின்பு 800 திரைப்படம் குறித்து நடிகர் விஜய் சேதுபதி கூறுகையில் ,நன்றி, வணக்கம்’ என்றாலே எல்லாம் முடிந்து விட்டதாக அர்த்தம்,இனி பேசுவதற்கு ஒன்றுமில்லை என்று கூறினார்.இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி மகளுக்கு சமூக வலைத்தளமான ட்விட்டர் மூலம் பாலியல் வன்கொடுமை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளம் மூலமாக மிரட்டல் விடுத்த நபர் குறித்து சைபர் கிரைம் போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.ஏற்கனவே சமூக வலைத்தளம் மூலமாக தோனியின் மகளுக்கு மிரட்டல் விடுத்தநபர் அண்மையில் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வரும் சூழலில் இன்று பட்ஜெட் மீதான தனது விளக்கத்தை…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகி வரும் நிலையில், அவர் தனது…
ஆப்பிரிக்கா : யூ-டியூப் இணையதள பக்கத்தில் 376 மில்லியன் (37.6 கோடி) பின்தொடர்பாளர்களை கொண்டுள்ள பிரபல யூடியூபர் மிஸ்டர் பீஸ்ட்…
கடலூர் : அரசு நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுப்பட்ட விவசாயிகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை கடலூர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் முதல் போட்டியாக, நாளை (மார்ச் 22) கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் கொல்கத்தா நைட்…