பிரதமரான ராஜபக்சே…!நாடாளுமன்ற அவசரகூட்டத்தை கூட்ட வேண்டும்..!நம்பிக்கை வாக்கெடுப்பு வேண்டும் …!ரணில் விக்கிரமசிங்கே அடுத்த நகர்வு
இலங்கை நாடாளுமன்ற அவசரகூட்டத்தை கூட்ட வேண்டும் என ரணில் விக்கிரமசிங்கே வலியுறுத்தி உள்ளார்.
இலங்கையில் 2015 வருடம் அதிபராக மைத்திரி பால சிறிசேனா பதவியேற்றார். பிரதமராக ரணில் விக்கிரம சிங்கே தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் அதிபர் மைத்திரிபால சிறிசேனாவின் இலங்கை சுதந்திர கட்சிகளும் கூட்டணி அமைத்தது இந்த கூட்டணி 3 வருட ஆட்சியை இலங்கையில் நடத்தி வந்தது.இந்த நிலையில் இன்று திடீரென பிரதமராக இருந்த ரணில் விக்கரமசிங்கே அதிரடியாக நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக முன்னாள் அதிபராக இருந்த மஹிந்த ராஜபக்சே பிரதமராக பதவி ஏற்றுள்ளார். இந்த பதவியேற்பு விழா இலங்கை அதிபர் அலுவலகத்தில் நடந்த விழாவில் மகிந்த ராஜ்பக்சேவுக்கு அதிபராக உள்ள சிறிசேனா முன்னிலையில் இலங்கையின் பிரதமராக ராஜபக்சே பதவி ஏற்றுக்கொண்டார்.
முன்னாள் இலங்கையிப் அதிபராக மஹிந்த ராஜபக்சே 2005-ம் ஆண்டு முதல் இலங்கையின் அதிபரானார். இவர் பதவியேற்ற காலகட்டங்களில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை அதிபராக இருந்த ராஜபக்சே தீவிரப்படுத்தியதுடன் விடுதலை புலிகளின் தலைவர் கேப்டன் பிரபாகரன் உள்ளிட்டவர்களைக் கொடூரமாக கொலை செய்ய காரணமாக இருந்தவர்.இதனை தொடர்ந்து 2010 தேர்தலில் போட்டியிட்டு இரண்டாவது முறையாக இலங்கை அதிபராக பதவியேற்றார். இலங்கையில் ஒருவர் இரண்டு முறை மட்டுமே அதிபராக முடியும் என்ற நிலையில் 2010-ம் ஆண்டு இதற்கான சட்டத்தையே மாற்றிய ராஜபக்சே இலங்கையில் மூன்றாவது முறையாக 2015-ம் ஆண்டு அதிபர் பதவிக்கு போட்டியிட்டார்.இந்த முறை ராஜபக்சேவுக்கு மக்கள் வாய்ப்பளிக்கவில்லை. தோல்வியடைந்தார்.இதனை அடுத்து இலங்கையின் புதிய அதிபராக மைத்திரி பால பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறிசேனா பதவி ஏற்றதும் முன்னாள் அதிபர் ராஜபக்சே கொண்டு வந்த அந்த சட்டத்தை மாற்றியமைத்தார். மேலும் சிறிசேனா அமைச்சரவையில் பிரதமராக முன்னாள் அதிபர் ரணில் விக்கரமசிங்கே பதவி ஏற்றுச் செயல்பட்டு வந்த நிலையில் இந்த அதிரடி திடீர் மாற்றத்துக்கு காரணமாக கூட்டணி கட்சிகளில் ஏற்பட்ட பிளவே காரணம் எனக் கூறப்படுகிறது.
இலங்கை பிரதமராக ரணில் விக்ரம் சிங்கே தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும் அதிபர் மைத்திரிபால சிறிசேனாவின் இலங்கை சுதந்திர கட்சிகளும் கூட்டணி அமைத்தே இலங்கையில் ஆட்சி நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது. இந்தக் கூட்டணியில் ஏற்பட்ட விரிசல் காரணமாக சுதந்திர கட்சியைச் சேர்ந்த மஹிந்த ராஜபக்சே மீண்டும் பிரதமராக்கப்பட்டுள்ளார். இந்த மாற்றத்தை முன்னதாக திட்டமிட்ட ராஜபக்சே கடந்த மார்ச் மாதமே ரணிலை மாற்ற வேண்டும் என இலங்கை நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தான் பிரதமராக பதவியேற்றார்.
இந்நிலையில் இலங்கை நாடாளுமன்ற அவசரகூட்டத்தை கூட்ட வேண்டும் என ரணில் விக்கிரமசிங்கே வலியுறுத்தி உள்ளார்.அதேபோல் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் ரணில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோர உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 7 உறுப்பினர்களை கொண்ட இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ரணிலுக்கு ஆதரவு என அறிவிப்பு வெளியிட்டுள்ளது.