ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே உத்தரவை ஏற்க மறுக்கும் இலங்கை ராணுவம்.!

Default Image

தற்காலிக இலங்கை அதிபராக இருக்கும் ரணில் விக்ரமசிங்கே பிறப்பித்த போராட்டக்காரர்களை ராணுவத்தின் உதவியுடன் அடக்கும் உத்தரவை இலங்கை ராணுவம் ஏற்க முறுத்துவிட்டது. 

இலங்கையில் கடும் பொருளாதார சரிவு காரணமாக பொதுமக்கள் வீதியில் இறங்கி போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். வீதிவீதியாக போராடி, அரசு அலுவலகங்களை கைப்பற்றும் நிலைக்கு வந்துவிட்டனர்.

ஏற்கனவே, அதிபர் கோத்தபய ராஜபக்சே இலங்கையை விட்டு தப்பிச்சென்று, மாலத்தீவில் இருக்கிறார். அங்கிருந்து சிங்கப்பூர் செல்கிறாரா செல்ல உள்ளார் என தகவல்கள் வந்தவண்ணம் இருக்கிறது.

இதனை தொடர்ந்து தான், தற்காலிக அதிபராக ரணில் விக்ரமசிங்கே நியமிக்கப்பட்டுள்ளார். அவர் , ராணுவத்தின் உதவியுடன், போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த உத்தரவு பிறப்பித்தாராம்.

ஆனால், போராட்டக்காரர்களை ராணுவத்தின் உதவியுடன் அடக்கும் உத்தரவை இலங்கை ராணுவம் ஏற்க முறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்