ரமலான் மாதம் வந்து விட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன”..!!புனித ரமலானும்..இஸ்லாமும்..!!

Default Image

ரமலான் மாதம் வந்து விட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன”என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்.

இஸ்லாம் என்பது வெறும் மார்க்கமல்ல அது வாழ்க்கை முறை என்பது இந்த மதத்தவரின் உறுதியான நம்பிகையாகும் அதில் 5 பெறும் கடமைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

முதலாவது கடமை கலிமா என்றழைக்கப்படுகிறது இதற்கு ஓர் இறைக்கொள்கை என்பது பொருளாகும்.அதாவது அல்லா ஒருவனே இறைவன் என்பது கோட்பாடாகும்.

இரண்டாவது கடமை நாளேன்றுக்கு 5 வேளை தொழுகை ,முன்றாவது கடமை  ரமலான் மாதம் 30 நாட்கள் நோன்பு நோற்பது ,நான்காவது கடமை ஸ்க்காத் எனப்படும் ஏழைக்களுக்கு உதவி செய்தல் வேண்டும் என்பதாகும்.அதாவது ஒவ்வொரு இஸ்லாமியரும் தனது ஆண்டு வருமானத்தில் 2 1/2 சதவீதத்தை வறுமை நிலையில் உள்ள முஸ்லீம்களுக்கு கொடுத்து உதவ வேண்டும் என்பதாகும்.

கடைசி கடமை ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்வதாகும்.நோய்களால் பாதிக்கப்படாத வசதி படைத்த ஒவ்வொரு இஸ்லாமியரும் மற்றும் அவர்கள்கள் ஆணாக-பெண்ணாக இருந்தாலும் வாழ்வில் ஒரு முறையாவது புனித ஹஜ் பயணம் செல்ல வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.

 

இஸ்லாமிய நாட்காட்டியின் படி எட்டாவது மாதமான ரமலான் மாதத்தின் ஒர் இரவில் அந்த மதத்தினரின் புனித நூலான குர் ஆன் அருளப்பட்டது ஆகவே தான் அந்த மாதம் நோன்பு மாதமாக கடைபிடிக்கப்படுகிறது.

செல்வம் படைத்தவர்களும் பசி பட்டினி குறித்து அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும் உணவு கிடைக்காதவர்களின் நிலையை உணர வேண்டும் என்பதற்ககாகவே நோன்பு கட்டாயமாக்கப்பட்டது.  தனித்திரு,பசித்திரு,விழித்திரு என்பது இம்மாதத்தின் கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய கடமையாகும்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

Posted in UncategorizedTagged

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்