ராமே ஆண்டாளும் ராவணன் ஆண்டாளும் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் டம்மி பட்டாசு என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன். இந்த படத்தை தொடர்ந்து, ஜோக்கர், ஆன் தேவதை திரைப்படங்களில் நடித்தார். அதற்கு பிறகு, கடந்த 2019-ஆம் ஆண்டு புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு தென்னிந்தி அளவில் பிரபலமாகினார். அதன்பின், பிக் பாஸ் 3-வது சீசனில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமாகி தனக்கென்று ரசிர்கர்கள் பட்டாளத்தை பெற்றுக்கொண்டார்.
இந்த நிலையில், அடுத்ததாக நடிகை ரம்யா பாண்டியன் சூர்யா &ஜோதிகா இணைந்து தயாரித்துள்ள ராமே “ஆண்டாளும் ராவணன் ஆண்டாளும்” என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் அரிசில் மூர்த்தி என்பவர் இயக்கியுள்ளார்.
இந்த படத்திற்கான படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டு விறு விறுப்பாக நடைபெற்று வந்தது. கிராமத்து கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பும் அதிகமாகியது.
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டு நேரடியாக படம் அமேசான் பிரேம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என நடிகர் சூர்யா தனது சமூக வலைதளபக்கங்களில் அறிவித்திருந்தார். அதன்படி, தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி இந்த படம் வரும் 24-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பஞ்சாப் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், போட்டியில் விளையாடும் அணிகள்…
டெல்லி : இந்த வருட ஐபிஎல் (IPL 2025) திருவிழா வரும் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்…
சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி…
ஈரோடு : சேலம் மாவட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி ஜான் எனும் சாணக்யாவை மர்ம கும்பல் ஒன்று இன்று…
சென்னை : தங்கலான் படம் எதிர்பார்த்த அளவுக்கு மக்களுக்கு மத்தியில் பெரிய வரவேற்பை பெறவில்லை என்கிற காரணத்தால் அடுத்ததாக நடிகர்…
மகாராஷ்டிரா : மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வெடித்த வன்முறையானது பெரிய அளவில் பேசுபொருளாக வெடித்திருக்கிறது. சாம்பாஜி நகரிலுள்ள அவுரங்கசீப் கல்லறையை அகற்றவேண்டுமென…