பூஜையுடன் தொடங்கப்பட்ட ரம்யா பாண்டியனின் புதிய திரைப்படம்..!
சூர்யாவின் 2D நிறுவனம் தயாரிப்பில் நடிகை ரம்யா பாண்டியன் தயாரிக்கும் படத்திற்கான படிப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் நடிகை ரம்யா பாண்டியன் டம்மி டப்பாசு என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். இந்த படத்தை தொடர்ந்து ஆண் தேவதை, ஜோக்கர் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.ஆனால் இவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான் ரசிகர்களை தேடி கொடுத்தது என்று கூறலாம் . அதனையடுத்து பிக்பாஸ் சீசன்-4ல் கலந்து கொண்டு பல ரசிகர்களின் அன்பையும்,அதே நேரத்தில் பல சர்ச்சைகளையும் சந்தித்தார்.
இந்த நிலையில் பிக்பாஸிலிருந்து வெளியேறிய பின்னர் அவருக்கு பட வாய்ப்பு ஒன்று வந்துள்ளதாக கூறப்படுகிறது.அதாவது ரம்யா பாண்டியன் அடுத்ததாக சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இவருடன் நடிகை வாணிபோஜனும் நடிக்கிறார்.இந்த படத்திற்கான படப்பிடிப்பு இன்று பூஜையுடன் சென்னையில் தொடங்கியுள்ளது.
With all your wishes and love, shoot for #ProductionNo14 begins today!@Suriya_offl @rajsekarpandian @arisilmoorthy @mynnasukumar @krishoffl @MithunManick @Ramyapandian6 @vanibhojanoffl @muji004art @SivasSaravanan @gopalbalaji #VinodhiniPandian @SakthiFilmFctry @proyuvraaj pic.twitter.com/N4loY5GPxu
— 2D Entertainment (@2D_ENTPVTLTD) January 31, 2021