ராமேஸ்வரம் கோவிலில் மகாசிவராத்திரி திருவிழா இன்று தொடங்குகிறது

Published by
kavitha

ராமேசுவரம் கோவில் மகா- சிவராத்திரி திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

பிரசித்தி பெற்ற ராமேசுவரம் கோவில் மாசி மகா சிவராத்திரி திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கிறது.கொடியேற்றத்தோடு தொடங்குகிற இந்த விழாவனது வருகிற 25-ந் தேதி வரை 12 நாட்கள் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

திருவிழாவின் முக்கிய நாள்:

  • இன்று காலை 9 மணியில் இருந்து 10.30 மணிக்குள் கோவிலின் சுவாமி சன்னதி எதிரே உள்ள நந்தி மண்டபம் அருகில் உள்ள கொடிமரத்தில், கொடி ஏற்றத்தோடு திருவிழா தொடங்குகிறது.
  • அன்று இரவே சுவாமி தங்க நந்திகேசுவரர் வாகனத்தில், அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் எழுந்தருளி முக்கிய ரத வீதிகளில் உலா வருகின்ற  நிகழ்வு நடக்கிறது.
  • 2வது நாளான பிப்.,15ந் தேதி காலை 10 மணிக்கு சுவாமி-அம்பாள் பஞ்ச மூர்த்திகளோடு தங்க கேடயத்தில் எழுந்தருளி வீதிஉலா வரும் நிகழ்வும்,இரவு 8 மணிக்கு சாமி வெள்ளி கற்பக விருட்ச வாகனத்திலும், அம்பாள் தங்க காமதேனு வாகனத்தில் பஞ்ச மூர்த்திகளோடு எழுந்தருளுளி காட்சி தருகிறார்.
  • 3வது நாளான 16ந் தேதி அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 3.30 மணி முதல் 4.30 மணி வரை ஸ்படிக லிங்கத்திற்கு சிறப்பு பூஜை நடக்கிறது.சாமி-அம்பாள் தங்க கேடயத்தில் எழுந்தருளி ரத வீதிகளில் உலா வந்து, மீண்டும் கோவிலுக்கு வரும் நிகழ்வும் நடக்கிறது.
  • முக்கிய நிகழ்ச்சியான பிப்.,22ந்தேதி காலை 10 மணிக்கு சாமி-அம்பாள் தேரோட்ட நிகழ்ச்சி நடக்கிறது.
  • விழாவின்10வது நாள்அன்று மாசி அமாவாசையை முன்னிட்டு சாமி-அம்பாள் தங்க ரிஷப வாகனத்தில் பஞ்ச மூர்த்திகளுடன் எழுந்தருளி அக்னி தீர்த்த கடற்கரையில் தீர்த்தவாரி நிகழ்ச்சியானது சிறப்பாக நடைபெற உள்ளது.
  • இதையொட்டி வருகிற 16ந்தேதி காலை 6 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டு, இரவு வரையிலும் சாத்தப்பட்டிருக்கும்.

இவ்வேளையில் பக்தர்கள் யாரும் கோவிலில் தரிசனம் செய்யவோ,22 தீர்த்த கிணறுகளில் நீராடுவதற்கோ அனுமதி கிடையாது என்ற தகவலை திருக்கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

MI vs LSG: வெற்றி யாருக்கு.? லக்னோ அணியில் களமிறங்கிய மயங்க் யாதவ்.!

MI vs LSG: வெற்றி யாருக்கு.? லக்னோ அணியில் களமிறங்கிய மயங்க் யாதவ்.!

மும்பை : லக்னோ மற்றும் மும்பை அணிகள் மாலை 3:30 மணிக்கும், டெல்லி மற்றும் பெங்களூரு அணிகள் இரவு 7:30…

11 minutes ago

தவெக பூத் கமிட்டி: கடும் வெயிலில் நிற்கும் தொண்டர்கள்.., பாஸ் இருப்போருக்கு மட்டும் அனுமதி.!

கோவை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவையில் உள்ள குரும்பபாளையத்தில் தனியார் கல்லூரி வளாகத்தில் ஏப்ரல்…

2 hours ago

‘சச்செட்’ செயலி என்றால் என்ன? மன் கி பாத்தில் பிரதமர் மோடி இதை குறிப்பிட்டது ஏன்.?

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி தனது 121-வது மன் கி பாத் (Mann Ki Baat) உரையில், மியான்மரில்…

2 hours ago

“பஹல்காம் தாக்குதல்… ரத்தம் கொதிக்கிறது” – பிரதமர் மோடி ஆவேசம்.!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியவர்கள், குற்றவாளிகள் கடுமையான பதிலடியை எதிர்கொள்வார்கள் என பிரதமர் மோடி கூறியுள்ளார். பஹல்காமில்…

2 hours ago

பஹல்காம் தாக்குதல் எதிரொலி: 10 பயங்கரவாதிகளின் வீடுகள் குண்டு வைத்து தகர்ப்பு.!

காஷ்மீர் : பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது. ஸ்ரீநகரில் நேற்று (சனிக்கிழமை) 60க்கும்…

4 hours ago

கஞ்சா வைத்திருந்த மலையாள இயக்குநர்கள் 2 பேர் கைது.!

கேரளா : சமீபத்தில் ஹிட்டான 'ஆலப்புழா ஜிம்கானா', 'தள்ளுமாலா' படங்களின் இயக்குநர் காலித் ரகுமான் உள்பட மூவர் போதைப்பொருள் வழக்கில்…

4 hours ago