ராமேஸ்வரம் கோவிலில் மகாசிவராத்திரி திருவிழா இன்று தொடங்குகிறது

Default Image

ராமேசுவரம் கோவில் மகா- சிவராத்திரி திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

பிரசித்தி பெற்ற ராமேசுவரம் கோவில் மாசி மகா சிவராத்திரி திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கிறது.கொடியேற்றத்தோடு தொடங்குகிற இந்த விழாவனது வருகிற 25-ந் தேதி வரை 12 நாட்கள் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

திருவிழாவின் முக்கிய நாள்:

  • இன்று காலை 9 மணியில் இருந்து 10.30 மணிக்குள் கோவிலின் சுவாமி சன்னதி எதிரே உள்ள நந்தி மண்டபம் அருகில் உள்ள கொடிமரத்தில், கொடி ஏற்றத்தோடு திருவிழா தொடங்குகிறது.
  • அன்று இரவே சுவாமி தங்க நந்திகேசுவரர் வாகனத்தில், அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் எழுந்தருளி முக்கிய ரத வீதிகளில் உலா வருகின்ற  நிகழ்வு நடக்கிறது.
  •  2வது நாளான பிப்.,15ந் தேதி காலை 10 மணிக்கு சுவாமி-அம்பாள் பஞ்ச மூர்த்திகளோடு தங்க கேடயத்தில் எழுந்தருளி வீதிஉலா வரும் நிகழ்வும்,இரவு 8 மணிக்கு சாமி வெள்ளி கற்பக விருட்ச வாகனத்திலும், அம்பாள் தங்க காமதேனு வாகனத்தில் பஞ்ச மூர்த்திகளோடு எழுந்தருளுளி காட்சி தருகிறார்.
  • 3வது நாளான 16ந் தேதி அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 3.30 மணி முதல் 4.30 மணி வரை ஸ்படிக லிங்கத்திற்கு சிறப்பு பூஜை நடக்கிறது.சாமி-அம்பாள் தங்க கேடயத்தில் எழுந்தருளி ரத வீதிகளில் உலா வந்து, மீண்டும் கோவிலுக்கு வரும் நிகழ்வும் நடக்கிறது.
  • முக்கிய நிகழ்ச்சியான பிப்.,22ந்தேதி காலை 10 மணிக்கு சாமி-அம்பாள் தேரோட்ட நிகழ்ச்சி நடக்கிறது.
  • விழாவின்10வது நாள்அன்று மாசி அமாவாசையை முன்னிட்டு சாமி-அம்பாள் தங்க ரிஷப வாகனத்தில் பஞ்ச மூர்த்திகளுடன் எழுந்தருளி அக்னி தீர்த்த கடற்கரையில் தீர்த்தவாரி நிகழ்ச்சியானது சிறப்பாக நடைபெற உள்ளது.
  • இதையொட்டி வருகிற 16ந்தேதி காலை 6 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டு, இரவு வரையிலும் சாத்தப்பட்டிருக்கும்.

இவ்வேளையில் பக்தர்கள் யாரும் கோவிலில் தரிசனம் செய்யவோ,22 தீர்த்த கிணறுகளில் நீராடுவதற்கோ அனுமதி கிடையாது என்ற தகவலை திருக்கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்