ஷங்கர் இயக்கத்தில் இரட்டை வேடத்தில் மிரட்ட வருகிறாரா ராம்சரண்..??
ஷங்கர் இயக்கவுள்ள திரைப்படத்தில் ராம்சரண் இரண்டு வேடங்களில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தெலுங்கு திரையுலகின் பிரபலமான நடிகரான ராம் சரணின் 15 வது திரைப்படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்கவுள்ளார். இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜூ தயாரிக்கவுள்ளார். இதற்கான அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. அதனை தொடர்ந்து படத்திலிருந்து எந்த அறிவிப்பு வெளியாகவில்லை.
இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இந்நிலையில், இந்த திரைப்படத்தில் நடிகர் ராம்சரனுக்கு வில்லனாக பைரவா, விஸ்வாசம் போன்ற திரைப்படங்களில் வில்லனாக நடித்த ஜெகபதி பாபு நடிக்கவுள்ளதாகவும் படத்தில் நடிகர் ராம் சரண் இரண்டு வேடங்களில் நடிக்கவுள்ளதாகவு தகவல்கள் வெளியாகியுள்ளது.