சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் உலகநாயகனின் பங்களிப்பை உறுதி செய்த தயாரிப்பாளர் ராம் சரண்!

Published by
மணிகண்டன்

தெலுங்கு சினிமாவில் உருவாகியுள்ள அடுத்த பிரமாண்டம் சைரா நரசிம்ம ரெட்டி. இந்த படத்தை சுரேந்தர் ரெட்டி இயக்கியுள்ளார். மெகாஸ்டார் சிரஞ்சீவி நாயகனாக நடித்துள்ளார். விஜய் சேதுபதி, அமிதாப் பச்சன், நயன்தாரா, தமன்னா, என பலர் நடித்துள்ளனர். சிரஞ்சீவியின் மகனும், தெலுங்கு முன்னணி நடிகருமான ராம் சரண் இப்படத்தை தயாரித்துள்ளார்.

இன்று இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு, இன்று சென்னையில் நடைபெற்றது. அதில் சிரஞ்சீவி, ரேம் சரண், தமன்னா, மதன் கார்க்கி, இயக்குனர் மோகன் ராஜா என பல திரைபிரபலங்கள் கலந்துகொண்டனர்.

இதில் பேசிய தயாரிப்பாளர் ராம் சரண் படக்குழுவினரை புகழ்ந்து பேசினார். அடுத்து விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் மற்றும் 96 படமும் மிகவும் பிடிக்கும் எனவும், 96 படத்தின் க்ளைமேக்சில் விஜய் சேதுபதி அருமையாக நடித்திருந்தார் எனவும் குறிப்பிட்டார்.

இப்படத்தில் சிரஞ்செவிக்கு அரவிந்த் சாமி குரல் கொடுத்ததை சுட்டிக்காட்டினார். மேலும் அவர் 2 நாளில் டப்பிங் பணியை சிறப்பாக செய்திருந்தார் என கூறினார். இதனூடே, உலகநாயகன் கமல்ஹாசன் இதில் மூன்று நிமிடம் படத்தின் தொடக்கத்தில் பேசியிருப்பார் என கூடுதல் தகவலை தெரிவித்தார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

காயமடைந்த விராட் கோலி எப்படி இருக்கிறார்? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

காயமடைந்த விராட் கோலி எப்படி இருக்கிறார்? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

பெங்களூர் : ஆர்சிபி அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வென்றது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி,…

5 minutes ago

வக்ஃப் திருத்த மசோதா: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் ஸ்டாலின் அறிவிப்பு.!

சென்னை : எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா நேற்றைய தினம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இது…

48 minutes ago

எந்தெந்த பொருட்கள் வரிகளால் பாதிக்கப்படும்? அமெரிக்கா விதித்துள்ள வரிகள் விவரம்.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்றதில் இருந்து டோனால்ட் டிரம்ப், அடிக்கடி அதிரடி நடவடிக்கைகளை அறிவித்து வரும் நிலையில்,…

1 hour ago

LIVE : தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை முதல்..இந்தியாவுக்கு வரி விதித்த ட்ரம்ப் வரை!

சென்னை :  கடந்த சில நாட்களாக கோடைவெயில் வெளுத்து வாங்கிய நிலையில் நேற்று திடீரென சில மாவட்டங்களில் கனமழை வெளுத்து…

2 hours ago

ரொம்ப மகிழ்ச்சியா இங்க தான் இருக்கேன்…நேரலையில் வந்த நித்யானந்தா! வீடியோ இதோ..

சென்னை : கைலாசாவில் வசித்து வருவதாக சொல்லப்படும் நித்தியானந்தா கடந்த 2 நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாக அவருடைய சகோதரியின் மகன்…

3 hours ago

பிரதமர் மோடி நண்பர் தான் ஆனா இந்தியா 26 வரி கொடுக்கணும்! டிரம்ப் அதிரடி உத்தரவு!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அடிக்கடி அதிரடி நடவடிக்கைகளை அறிவித்து வரும் நிலையில், இன்று (ஏப்ரல் 3)…

4 hours ago