விண்ணில் பறந்த முதல் நபர் மன்னர் ராவணன்.! விரைவில் இது நிரூபிக்கப்படும்.!?

Default Image

ராவணன் ஒரு மிகப்பெரிய மன்னன். உலகில் முதலாக விண்ணில் பறந்த நபர் ராவணன்தான் எனவும், இலங்கை சிவில் ஏவியேஷன் (விமானபடை) ஆணையர் முன்னாள் துணை தலைவர் சஷி தனதுங்கே தெரிவித்துள்ளார்.

இலங்கை மன்னன் ராவணன், ராமனின் மனைவி சீதையை இலங்கைக்கு கடத்தி சென்றார் என்பது புராண கால வரலாறு. இதனை மறுக்கும் இலங்கை அரசு அதிகாரி, மன்னன் ராவணன் தான் விண்ணில் பரந்த முதல் நபர் எனவும் குறிப்பிட்டு பேசியுள்ளார்.

இது குறித்து சிவில் ஏவியேஷன் (விமானபடை) ஆணையர் முன்னாள் துணை தலைவர் சஷி தனதுங்கே பத்திரிக்கையாளர்களிடம் கூறுகையில், இலங்கை மன்னன் ராவணன் ஒரு மேதை. அவர் தான் விண்ணில் பறந்த முதல் நபர். இது கட்டுக்கதையல்ல. உண்மை சம்பவம். விரைவில் இதனை அரசு சார்பில் இதனை நிரூபிப்போம்.’ எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சீதையை ராவணன் கடத்தினார் என்பதை மறுத்துபேசினார். மேலும், அந்த கதை இந்திய பாதிப்பு எனவும், ராவணன் மிகப்பெரிய மன்னன் எனவும் குறிப்பிட்டார். இலங்கை மன்னன் ராவணன் பெயரில் ஒரு செயற்கைக்கோளை இலங்கை அரசு விண்ணில் ஏவியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்