வரலாற்றில் இன்று(01.04.2020)… ஸ்ரீ ராமசந்திர மூர்த்தி அவதரித்த தினம் இன்று…
ஸ்ரீராமபிரான் எதற்காக நவமி திதியில் பிறந்தார் என்ற கதை நம்மில் பலருக்கு தெரியுமா? என்றால் அது சந்தேகம். பொதுவாக அஷ்டமி திதி அன்றும், நவமி திதி அன்றும் எந்த ஒரு நல்ல காரியத்தையும் செய்ய மாட்டார்கள். இதனால் வருத்தப்பட்ட அஷ்டமியும், நவமியும் ஒருநாள் மிகவும் வருத்தப்பட்டு மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிட்டார்கள். எங்கள் இருவரையும் ஒதுக்கி வைத்துள்ளார்கள். இதனால் எங்களுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது என்றபடி தங்களது கஷ்டத்தை விஷ்ணு பகவானிடம் நவமி, அஷ்டமி திதிகளும் முறையிட்டுள்ளது. கஷ்டத்தோடு வந்த அஷ்டமி, நவமி க்கும் விஷ்ணுபகவான் ஆறுதல் அளித்தார். ‘உங்கள் இருவரையும் போற்றக்கூடிய நாள் வரும். அதுவரை நீங்கள் இருவரும் காத்திருக்க வேண்டும் என்றவாறு கூறினார்.’ இதன் படியே அஷ்டமி திதி அன்று எம்பெருமான், கிருஷ்ணர் அவதாரத்தையும், நவமி திதி அன்று ராமர் அவதாரத்தையும் எடுத்தார். இதன் அடிப்படையில் நாம் எல்லோரும் கோகுல அஷ்டமியும், ராம நவமியும், அஷ்டமி திதியில் நவமி திதியில் கொண்டாடி வருகின்றோம் என்பதுதான் உண்மை. இந்த ஸ்ரீ ராம பகவானின் இந்த அவதாரங்கள் இந்த தினங்களில் அவதரிக்க காரணம் ஆகும்.