சூப்பர் ஸ்டாரின் தர்பார் பட வாய்ப்பை தவறவிட்ட முன்னணி கதாநாயகன்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்நடிப்பில் அடுத்து தயாராகி வரும் திரைப்படம் தர்பார். இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி அருகினார். இப்படத்தின் ஷூட்டிங் மற்றும் டப்பிங் பணிகள் முடிவடைந்து விட்டன. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.
இப்படம் வரும் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார். யோகிபாபு, நிவேதாதாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கன்னட ஹீரோ ராக்ஷித் ஷெட்டியிடம் கேட்கப்பட்டது. ஆனால் அவர் அப்போது அவரே ஸ்ரீமன்நாராயணா எனும் கன்னட படத்தில் நடித்து வந்ததால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போனது.
ரக்ஷித் ஷெட்டி நடித்துள்ள அவனேஸ்ரீமன்நாராயணா திரைப்படம் கன்னடம் மட்டுமல்லாது, தமிழ், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளிலும் தயாராகியுள்ளது. இப்படம் அணைத்து மொழிகளிலும் டிசம்பர் 27இல் வெளியாக உள்ளது.