தண்டாலில் தடாலடி உலக சாதனை புரிந்து வரும் ஐந்து வயது சிறுவன்..!குட்டி அர்னால்டு என்று புகழாரம்..!!
ரஷ்யா நாட்டை சேர்ந்த 5 வயது சிறுவன் தண்டால் எடுப்பதில் 6 உலக சாதனைகள் படைத்து அசத்திவுள்ளான்.
ரஷ்யா நாட்டில் செசென் குடியரசு மழலையர் பள்ளியில் படித்து வரும் சுட்டி சிறுவன் தான் ரகிம் குரேயெவ் (5). இவன் தண்டால் எடுப்பதில் குட்டி அர்னால்டு என்றே அழைக்கப்படுகிறான். இந்த சிறுவன் தற்போது தண்டால் எடுப்பதில் 6 உலக சாதனைகளை படை மேலும் 40 நிமிடங்கள் 57 வினாடிகளில் சுமார் ஆயிரம் தண்டாலும் மற்றும் ஒரு மணி நேரம் 30 நிமிடத்தில் சுமார் 2000 தண்டால்களும் எடுத்து இந்த சுட்டி உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்து உள்ளான்.
5 வயது குழந்தையின் இந்த சாதனை நினைத்து கொண்டிருக்கையில் மூன்றாவதாக ஒரு சாதனையை நிகழ்த்தி உள்ளான் குட்டி சிறுவன் இப்பொழுது ஒரு மணி நேரத்தில் 1419 தண்டால்கள் எடுத்தும் மேலும் 2 மணி நேரத்தில் 2559 தண்டாலும்,இப்படி ஒவ்வொன்றையும் எண்ணி கொண்டுருக்கும் வேளையில் 5 சாதனைகளை மளமளவென குவித்து விட்டான்.
அதில் 2 மணி நேரம் 22 நமிடங்கள் 09 விநாடிகளில் 3000 தண்டால்களும் எடுத்து இதுவரை ஐந்து சாதனைகள் படைத்துள்ள குட்டி 3,202 தண்டால் எடுத்து மேலும் ஒரு சாதனையையும் படைத்துள்ளான். இந்த குட்டி மொத்தம் ஆறு உலக சாதனைகளை முறியடித்து புது சாதனை செய்து அசத்தி உள்ளான் குட்டி அர்னால்ட்.
இந்த குட்டி அர்னால்டு ரகிமின்க்கு சாதனையை பாராட்டி மெர்சிடஸ் ஒரு பென்ஸ் காரை பரிசாக வழங்கப்பட்டது. இவன் செல்லும் பொம்மை கடையில் அவனுக்கு பிடித்த பொருட்களை விருப்பத்திற்கு ஏற்க வாங்கிக்கொள்ள ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ரஷ்ய அதிபர் விலாடிமிர் புதின் குட்டி அர்னால்டு ரகீமை பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. அர்னால்டின் சாதனையை அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.