எம்பிக்களை ராஜினாமா செய்ய வைப்பது தேவையற்றது!
தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, எம்பிக்களை ராஜினாமா செய்ய வைப்பது என்ற கருத்து தேவையற்றது என தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், வேலைக்குச் செல்லும் மகளிருக்கு மானிய விலை ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார். அனைத்துக் கட்சி பிரதிநிதிகளை சந்திக்க பிரதமர் மோடி மறுத்ததாக கூறுவது தவறு என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.