பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை சந்தித்துள்ளார் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.
பிரான்ஸ் நாட்டிலிருந்து ரபேல் போர் விமானங்களை வாங்குவது தொடர்பாக மோடி அரசு ஒப்பந்தம் செய்திருந்தது.அதன் படி, 60 ஆயிரம் கோடிக்கு 36 ரபேல் ரக போர் விமானம் வாங்க ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதற்கான முதல் விமானத்தை இன்று இந்தியா வசம் பிரான்ஸ் ஒப்படைக்க உள்ளது. இதனை வாங்குவதற்கான நிகச்சியில் கலந்து கொள்ள மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரான்ஸ் சென்றார்.அங்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை சந்தித்துள்ளார் ராஜ்நாத் சிங்.பின் பாரீஸ் நகரில் இருந்து மெரிக்னாக் நகருக்கு பிரெஞ்ச் ராணுவ விமானத்தில் செல்கிறார் ராஜ்நாத் சிங்.