பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மாஸ்கோவிலிருந்து ஈரானின் தலைநகரான தெஹ்ரானுக்கு புறப்பட்டார்.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் பங்கேற்கும் மாநாடு நடைபெறுகிறது. இதற்காக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொள்ள ராஜ்நாத் சிங் 3 நாள் பயணமாக ரஷ்யா சென்றார்.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற ஷாங்காய் மாநாட்டில் கலந்துகொண்ட இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் .இதன் பின் ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சருடன் ஆலோசனை மேற்கொண்டார்.இதனையடுத்து சீன ராணுவ அமைச்சரான வி வெங்கையை சந்தித்து பேசினார்.இந்த சந்திப்பில்,இந்தியா-சீனா உறவுகள் குறித்து இரு அமைச்சர்களும் வெளிப்படையாக ஆலோசித்ததாக கூறப்படுகிறது.கடந்த சில மாதங்களாக இந்தியா-சீனா எல்லைப் பகுதியின் கால்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்டது குறித்து இந்தியாவின் நிலைப்பாட்டை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.சீன துருப்புக்களின் நடவடிக்கைகள், ஏராளமான துருப்புக்களை குவித்தல், ஆக்கிரோஷமான நடத்தை மற்றும் ஒருதலைப்பட்சமாக நிலைமையை மாற்றுவதற்கான முயற்சிகள் ஆகியவை இருதரப்பு ஒப்பந்தங்களை மீறுவதாக அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். பின்னர் தஜிகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர்,கஜகஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் ,உஸ்பெஸ்கிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் உள்ளிட்டோருடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்நிலையில் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மாஸ்கோவிலிருந்து ஈரானின் தலைநகரான தெஹ்ரானுக்கு புறப்பட்டார்.அங்கு ஈரானின் பாதுகாப்புத் துறை அமைச்சருடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…