தகிக்கும் கால்வான்:ரஷ்யா செல்லும் பாதுகாப்புத்துறை அமைச்சர்!

Default Image

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்  இன்று ரஷ்யா செல்கிறார்.அங்கு ராணுவ அணிவகுப்பில் கலந்து கொள்வதுடன்,ராணுவ ஆயுதங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனா-இந்தியா இடையே தகித்து வருகிறது எல்லைப் பிரச்சணை இன்னும் இரு மாதக்காலத்திற்குள் லாடக்கில் இருந்து இந்தியாவை துடைத்து எரிவோம் என்று அந்நாட்டு அதிபர் தனது ட்விட்டர் பக்கத்திலேயே தெரிவிக்கிறார்.சீன ராணுவம் தொடர்ந்து எல்லையில் அத்துமீறி வருகிறது.

இந்தியா எல்லையில் இம்மி அளவும் விட்டுக்கொடுக்க முடியாது என்று வீரர்களை குவித்தும் முப்படையும் தொடர்ந்து கண்காணிப்பிலும் ,சீனாவின் நடவடிக்கைகளை கண்காணித்தப்படி இருந்து வருகிறது.11 மணி நேரமாக விடிய விடிய பேச்சு வார்த்தை நடைபெற்றது.இவ்வாறு சீன-இந்தியா இடையே விரிசல் விபரீதமாகி கொண்டிருக்கும் வேளையில் சீனாவை கண்டிக்கும் வகையில்  ரஷ்யாவில் நடக்கும் ராணுவ அணிவகுப்பில் இன்று இந்தியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து வெளியான தகவல்: இந்தியாவின் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மூன்று நாள் பயணமாக ரஷ்யா செல்ல இருக்கிறார். இந்திய -சீனா இடையே மோதல் நிலவி வருகின்ற நிலையில் ராஜ்நாத்சிங்கின் இந்த பயணம் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.இந்தியா ரஷ்யா இடையே கடந்த இரண்டு வருடங்களில் நிறைய ராணுவ ஒப்பந்தங்கள் போடப்பட்டது. இந்த நிலையில் ரஷ்யாவிடம் இருந்து போர் விமானங்கள், ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் ஆயுதங்களை இந்தியா வாங்க உள்ளது.

அதே போல நேற்று ராஜ்நாத் சிங் ரஷ்யாவின் அதிகாரிகள் உடன் திடீரென ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தியாவிற்கு ரஷ்யா இந்த ஆயுதங்களை , விமானங்களை விரைவாக வழங்க வேண்டும். fastrack அடிப்படையில் இந்தியாவிற்கு ரஷ்யா ஆயுதங்களை வழங்க வேண்டும், என்ற கோரிக்கையை அவர் வைத்ததாக கூறப்படுகிறது. இந்தியா – சீனாவின் மோதல் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த  நிலையில் தான் ரஷ்யா இரண்டாம் உலகப்போரில் நாசிக் ஜெர்மனியை வீழ்த்தியது.  இந்த போர் நடந்து சுமார் 75 வருடங்கள் முடிந்த நிலையில் இதில் 20 மில்லியன் ரஷ்ய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இவர்களை நினைவு கூறும் விதமான அங்கு இன்று ராணுவ அணிவகுப்பு நடக்கிறது.இந்த அணி வகுப்பில் கலந்து கொள்ள இந்தியா உள்ளிட்ட 11 நாடுகளுக்கு ரஷ்யா அழைப்பு விடுத்தது. இதன் பெயரிலே அங்கு நடக்கும் ராணுவ அணிவகுப்பில் இன்று இந்தியாவின் சார்பில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொள்கிறார்.இதில் சீனாவும் கலந்து கொள்கிறது என்பது கூடுதல் தகவல் ஆகும்.

ரஷ்ய பயணம் குறித்து ராஜ்நாத் சிங்  கூறுகையில்  இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான உறவுகள் “சிறப்பு மற்றும் சலுகை பெற்ற செயல் திட்ட கூட்டாண்மை” ஒன்றாகும், மேலும் இரு தரப்பினருக்கும் இடையே நடந்து வரும் இராணுவ ஒப்பந்தங்கள் பராமரிக்கப்படும், மேலும் பல வழக்குகளில் குறுகிய காலத்தில் முன்னோக்கி கொண்டு செல்லப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் அவர்  75 வது ஆண்டுவிழா ராணுவ அணிவகுப்பில் கலந்து கொள்ள ரஷ்ய பாதுகாப்பு அமைச்சரின் அழைப்பின் பேரில் மூன்று நாள் பயணமான தனது மாஸ்கோ பயணம் ஒரு உத்தியோகபூர்வ தூதுக்குழுவின் இந்தியாவிலிருந்து முதல் வெளிநாட்டு விஜயம் என்று கூறிய அவர்  “இது எங்கள் சிறப்பு நட்பின் அறிகுறியாகும். தொற்றுநோயின் அனைத்து சிரமங்களும் இருந்தபோதிலும், எங்கள் இருதரப்பு உறவுகள் பல்வேறு மட்டங்களில் நல்ல தொடர்புகளை வைத்திருக்கின்றன” என்று ராஜ்நாத் சிங் செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றும் போது கூறினார்.மேலும்  “இந்தியா-ரஷ்யா உறவுகள் சிறப்பு மற்றும் சலுகை பெற்ற செயல்திட்ட கூட்டாண்மை ஒன்றாகும். எங்கள் பாதுகாப்பு உறவு அதன் முக்கியமான தூண்களில் ஒன்றாகும்” என  கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Election Result
Congress - TMC - BJP
Annamalai (14) (1)
dindigul srinivasan
Devendra Fadnavis - Eknath shinde - Ajit Pawar
JMM - Congress
rain news today