ஈரான் பாதுகாப்புத் துறை அமைச்சருடன் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை

Default Image

ஈரான் பாதுகாப்புத் துறை அமைச்சர் பிரிகேடியர் ஜெனரல் அமீர் ஹடாமி உடன் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை மேற்கொண்டுள்ளார் .

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் ‌ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் பங்கேற்கும் மாநாடு நடைபெற்றது. இதற்காக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொள்ள ராஜ்நாத் சிங் 3 நாள் பயணமாக ரஷ்யா சென்றார்.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற ஷாங்காய் மாநாட்டில் கலந்துகொண்ட இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் . இதன் பின் ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சருடன் ஆலோசனை மேற்கொண்டார்.இதனையடுத்து சீன ராணுவ அமைச்சரான வி வெங்கையை சந்தித்து பேசினார்.இந்த சந்திப்பில்,இந்தியா-சீனா உறவுகள் குறித்து இரு அமைச்சர்களும் வெளிப்படையாக ஆலோசித்ததாக கூறப்படுகிறது.கடந்த சில மாதங்களாக இந்தியா-சீனா எல்லைப் பகுதியின் கால்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்டது குறித்து இந்தியாவின் நிலைப்பாட்டை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

இதனிடையே  இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மாஸ்கோவிலிருந்து ஈரானின் தலைநகரான தெஹ்ரானுக்கு சென்றடைந்தார்.இந்நிலையில் ஈரான் பாதுகாப்புத் துறை அமைச்சர் பிரிகேடியர் ஜெனரல் அமீர் ஹடாமி உடன் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை மேற்கொண்டுள்ளார் .பிராந்திய பாதுகாப்பு விவகாரங்கள் குறித்தும் இருநாட்டு உறவு குறித்தும் ஆலோசனை மேற்கொண்டுள்ளார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்