இந்தியா – சீனா எல்லைகள் நிலவரம் குறித்து, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்- ராணுவ தலைமை தளபதி முகுந்த் நரவானே இருவரும் இடையே திடீர் சந்திப்பு நிகழ்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்திய எல்லைப்பகுதியான லடாக்கின் சர்ச்சைக்குரியதாக சீனாவால் அத்துமீறி ஆக்கிரமிப்பு சம்பவத்தால் கடுமையான பதற்றம் நிலவி வந்தது.இந்நிலையில் முப்படை தளபதிகளும் தங்களது படைகளை சந்தித்த வண்ணம் இருந்தனர்.அதன் ஒரு நிகழ்வாக கடந்த வாரத்தில் எல்லை பகுதியில் ராணுவ வீரர்களை ராணுவ படைத்தளபதி முகுந்த் நரவானே சந்தித்து பேசினார். சந்திப்பில் எல்லையில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளை பார்வையிட்டார்.
ராணுவ படைத்தளபதியைப் போலவே, விமான படை தலைமை தளபதி, ஆர்.கே.எஸ்.பதவுரியாவும் காஷ்மீர் எல்லையில் ராணுவ வீரர்களின் தயார் நிலை குறித்த ஆய்வினை 2 நாட்களாக ரகசியமாக செய்தாக தகவல் வெளியாகியது. இந்நிலையில், நேற்று ராணுவ அமைச்சர், ராஜ்நாத் சிங்கை,இந்திய ராணுவ படைத்தளபதி முகுந்த் நரவானே சந்தித்துப் பேசிதாக தகவல் வெளியாகி உள்ளது.இந்த சந்திப்பில் எல்லையில் ராணுவம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அவர், விவரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
(வியாழன்)நேற்று முன்தினம் பதற்றமாக காணப்பட்ட கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவம் ஆனது 1 கிலோ மீட்டர் துாரம் பின்வாங்கிய நிலையில் இருவர்களுடைய இந்த சந்திப்பு, அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…