வரலாற்றில் இன்று(31.12.2019).ராஜீவ் காந்தி இந்தியப் பிரதமரானார்..!

Default Image

திரு.ராஜீவ் காந்தி மிகவும் இளம் வயதில் தமது 40 வயதிலேயே இந்தியாவின் பிரதமரானார். அதுமட்டுமல் உலகிலேயே இளம் வயதில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் தலைவர்களான சிலரில் இவரும் ஒருவர் அவரது தாயார் திருமதி. இந்திராகாந்தி அவரது 48 வயதில், 1966 ஆம் ஆண்டு முதல்முறை பிரதமராக பொறுப்பெற்றார்.

ராஜீவ்காந்தி 1944 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20 ஆம் தேதி பம்பாயில் பிறந்தார். அவருக்கு 3 வயது நடக்கும்போது இந்தியா சுதந்திரம் பெற்று அவரது தாத்தா பிரதமரானார். அவரது பெற்றோர்கள் லக்னோவில் இருந்து புதுதில்லிக்கு இடம் பெயர்ந்தனர். அவரது தந்தை பெரோஸ் காந்தி நாடாளுமன்ற உறுப்பினரானார்.

ராஜீவ்காந்தி தனது குழந்தை பருவத்தில் தனது தாத்தாவுடன் தீன் மூர்த்தி இல்லத்தில் இருந்தார். பள்ளிப்படிப்பை முடித்தவுடன் ராஜீவ் காந்தி கேம்பிரிட்ஜ்ஜில் உள்ள டிரினிட்டி கல்லூரியில் சேர்ந்தார். ஆனால், விரைவில் அவர் லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரிக்கு மாற்றப்பட்டார்.

அவருக்கு மிகவும் பிடித்தது விமானம் ஓட்டுவது. இங்கிலாந்திலிருந்து இந்தியா வந்தவுடனே தில்லி விமான ஓட்டுதல் கழகத்தின் நுழைவுத்தேர்வில் தேர்ச்சிபெற்றார்.கேம்பிரிட்ஜ்ஜில் இருந்தபோது ஆங்கிலத்துறையில் படித்துக் கொண்டிருந்த இத்தாலி பெண் சோனியா மைனோவை சந்தித்தார்.

பின்னர் இருவர்கள் 1968-ல் புதுதில்லியில் திருமணம் செய்து கொண்டு  தங்களது இரு குழந்தைகள் ராகுல் மற்றும் பிரியங்காவுடன் புதுதில்லியில் உள்ள திருமதி இந்திராகாந்தியின் இல்லத்தில் இருந்தனர்.

இதையடுத்து 1980-ல் விமான விபத்தில் உயிரிழந்த அவரது சகோதரர் சஞ்சயின் மரணம் பின்னர் அரசியலில் ராஜீவ்காந்தி இறங்கி அவரது தாயாருக்கு உதவவேண்டும் என்ற நெருக்கடி ஏற்பட்டது.இந்நிலையில் 1984 அக்டோபர் 31 அன்று அவரது தாயார்  சுட்டு கொல்லப்பட்டார். இதையடுத்து ராஜீவ்காந்தி 1984 டிசம்பர் 31-ம் தேதி பிரதமராக பதவியேற்றார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்