பேரு காளையன், ஊரு சூரைக்கோட்டை மாஸான வசனங்களுடன் ரஜினியின் அண்ணாத்த ட்ரைலர்!

அண்ணாத்த படத்தின் பாடல்களும், படத்தின் டீசரும் வெளியாகி, ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வந்த நிலையில், ட்ரைலர் வெளியீடு.
இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, சூரி, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து உருவாகியிருக்கும் படம் ‘அண்ணாத்த’. வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் தீபாவளி அன்று நவ.4ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
இதனிடையே, அண்ணாத்த படத்தின் டீஸர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. அதுமட்டுமில்லாமல் அண்ணாத்த டைட்டில் பாடல், சாரல் காற்றே, மருதாணி, வா சாமி ஆகிய பாடல்களின் லிரிக்கல் வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களிடையே ஒரு நல்ல வரவேற்பை பெற்றுயிருந்தது. அண்ணன் – தங்கை பாசம் படத்தில் பிரதானமாக இருக்கும் என்று படக்குழு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் அண்ணாத்த படத்தின் ட்ரெய்லர் அக்டோபர் 27ம் தேதி இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என்று அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது. அதன்படி, சரியாக 6 மணிக்கு அண்ணாத்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நீ யாருங்கிறது நீ சேத்து வைக்கிற சொத்துலையோ, சுத்தி இருக்கவங்க உன் மேல பயத்துலையோ இல்ல.. நீ செய்ற செயல்லையும், நீ பேசுற பேச்சுளையும் இருக்கு.. இது வேத வாக்கு என மாஸான டயலாக்குடன் ட்ரெய்லர் தொடங்குகிறது.
பேரு காளையன், ஊரு சூரைக்கோட்டை, சுத்தி இருக்கிற எல்லா கிராமத்துக்கும் பிரசிடென்டு என்று ரஜினிக்கு அம்சமான அறிமுகம் கொடுத்திருக்கிறார்கள். மேலும், ட்ரெய்லரில் ரஜினி ஸ்டைலாக மட்டும் இல்லை மாஸா, குறும்பா இருக்கிறார்.
அண்ணாத்த படத்தின் ட்ரெய்லரை பார்த்துவிட்டு ரசிகர்கள் மட்டுமல்லாமல், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றன. அந்த வகையில், இது தலைவர் திருவிழா என்று அண்ணாத்த ட்ரைலர் வெளியானதை குறிப்பிட்டு ரஜினிகாந்தை புகழ்ந்து நடிகர் தனுஷ் பதிவிட்டுள்ளார்.
Aaravaramai Akroshamai Anandhamai#AnnaattheTrailer:
▶ https://t.co/fsOTrObxcS@rajinikanth @directorsiva #Nayanthara @KeerthyOfficial @immancomposer @prakashraaj @IamJagguBhai @khushsundar #Meena @sooriofficial @AntonyLRuben @dhilipaction @vetrivisuals
— Sun Pictures (@sunpictures) October 27, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
Live : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் முதல்.., டிரம்ப் – ஜெலன்ஸ்கி சந்திப்பு வரை…
March 1, 2025
உலகமே பார்த்து ஷாக்… டிரம்ப் – ஜெலன்ஸ்கி கடும் மோதல்.! வெள்ளை மாளிகையில் என்னதான் நடந்தது?
March 1, 2025
சாம்பியன்ஸ் டிராபி : குறுக்கே வந்த மழையால் போட்டி ரத்து… அரையிறுதிக்கு முன்னேறிய ஆஸ்திரேலியா.!
March 1, 2025
வணிக பயன்பாட்டுக்கான LPG சிலிண்டர் விலை உயர்வு.!
March 1, 2025
நடிகை வழக்கில் தொண்டர்கள் திரள் நடுவில் காவல் நிலையத்தில் சீமான் ஆஜர்!
February 28, 2025