சேலத்தில் ராமருக்கு செருப்புமாலை.. நிர்வாண ஊர்வலம்…குறித்த பெரியார் பேச்சு..!தீர்ப்பு தேதி அறிவிப்பு

Default Image

சர்ச்சைக்குரிய வகையில் துக்ளக் விழாவில் பெரியார் குறித்து பேசியதாக நடிகர் ரஜினியின் மீது வழக்கு பதியப்பட்டது அந்த வழக்கின் தீர்ப்பு தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதத்தில் சென்னையில் நடந்த துக்ளக் இதழின் ஆண்டு விழா நிகழ்ச்சியில் க்லந்து கொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த், 1971-ம் ஆண்டு சேலத்தில் தந்தை பெரியார் நடத்திய பேரணி ஒன்றில் சுவாமி ராமன், சீதை ஆகியோரின்  உருவங்களை நிர்வாணமாக ஊர்வலமாக  எடுத்து செல்லப்பட்டதாகவும், மேலும் செருப்பு மாலை அணிவிக்கப்பட்டி இருந்ததாகவும் அதிரடியாக ரஜினி அதில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அவருடைய இந்த கருத்தானது பெரியார் பற்றி பொய்யான தகவலை பரப்பி பெரியாரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதோடு பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில்  பேசியதாக  நடிகர் ரஜினி மீது வழக்கு பதிவு செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் திராவிட விடுதலை கழக சென்னை மாவட்ட தலைவர் உமாபதி என்பவர் புகார் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Image result for ரஜினி
அவருடைய இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்ததையடுத்து சென்னை எழும்பூர் 2வது பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் உமாபதி ஒரு மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவானது நீதிபதி ரோஸ்லின் துரை முன்பு விசாரணைக்கு நேற்று வந்தது.

Image result for ரஜினி

மனுவில்  துக்ளக் இதழில் ராமர் சீதை சிலைகள் நிர்வாணமாக கொண்டு சென்றதாகவும் தொடர்பாக எந்த ஆதார புகைப்படமும் இல்லை 50 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து தன்னுடைய அரசியல் லாபத்திற்காக ரஜினி இப்போது பேசி அமைத்திக்கு குந்தகம் விளைவித்தாகவும், வன்முறையை தூண்டிவிட்டதாக மனுதாரர் தரப்பில்  குற்றம் சாட்டப்பட்டது.

Image result for ரஜினி

மேலும் வன்முறையை தூண்டும் விதத்தில் யார் பேசினாலும் அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றமே உத்தரவிட்டுள்ளது.அதன்படி மத உணர்வுகளை தூண்டியும் பெரியாரின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் வன்முறையை தூண்டிய நடிகர் ரஜினிகாந்த் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுதார் தரப்பில்  வாதிடப்பட்டது .மனுதாரரின்  வாதங்களை கேட்ட நீதிபதி வழக்கின் தீர்ப்பை மார்ச் 9ம் தேதிக்கு தள்ளி வைத்து வழக்கை ஒத்திவைத்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்