புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நடிகர் தவசியின் உடல்நலத்தை குறித்து ரஜினிகாந்த் மேலாளர் வாயிலாக கேட்டறிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், கொம்பன் உள்ளிட்ட வெற்றி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகர் தவசி தற்போது முகத்தில் மீசை இன்றி, முடியின்றி மிகவும் மெலிந்து எலும்பும் தோலுமாக காணப்படுகிறார் . புஉணவுக்குழாய் ற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர் சிகிச்சைக்கு பணமின்றி அவதிப்படுவதாக தகவல்கள் வெளியானதை அடுத்து அவருக்கு தமிழ் திரையுலகில் உள்ளவர்கள் உதவ கோரி வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அதனை தொடர்ந்து திருப்பரங்குன்றம் திமுக எம்எல்ஏ-ஆன மருத்துவர் சர்வணன் தனது மருத்துவமனையில் தவசியை அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார். மேலும் பல பிரபலங்கள் தங்களால் இயன்ற தொகையை வழங்கி உதவி வருகின்றனர். ஏற்கனவே சூரி சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் நிதியுதவி வழங்கி உதவியது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது நடிகர் ரஜினிகாந்த் அவர்களும் தவசிக்கு உதவ முன் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது ரஜினிகாந்த் அவர்களின் மேலாளர் , ரஜினி கூறியதன் அடிப்படையில் தவசியின் உடல்நலத்தை குறித்தும் , சிகிச்சை குறித்தும் விசாரித்ததுடன் , அவருக்கு சார் உதவி செய்ய தயாராக இருப்பதாகவும் தவசியின் குடும்பத்திடம் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…