அண்ணாத்த படப்பிடிப்புக்காக மேற்கு வங்கம் செல்கிறார் ரஜினிகாந்த்.!

அண்ணாத்த திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக நாளைrajinikanth மறுநாள் நடிகர் ரஜினிகாந்த் (ஜூலை 14) மேற்கு வங்கம் செல்கிறார்.
இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த. இந்த திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்து வருகிறார். படத்திலிருந்து வெளியான போஸ்டர் ரசிகர்களுக்கு மத்தியில், பலத்த வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படம் வருகின்ற நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளி அன்று வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், அண்ணாத்த படத்தின் படப்பிடிப்புகாக நடிகர் ரஜினி காந்த் மேற்கு வங்கம் செல்கிறார். அதாவது, அண்ணாத்த திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு 4 நாட்கள் மிதமுள்ளதால் நடிகர் ரஜினிகாந்த் நாளை மறுநாள் (ஜூலை 14) மேற்கு வங்கம் செல்கிறார். அங்கு 4 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறுகிறது.
இந்த திரைப்படத்தில் மீனா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சதீஷ், சூரி, ஜெகபதி பாபு, போன்ற பல நடிகர்கள், நடிகைகள் நடித்து வருகிறார்கள். விரைவில் படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.