சூப்பர் ஸ்டார் ரஜினியின் முதல் காதல் பற்றி தெரியுமா?! ரகசியம் உடைத்த பாட்ஷா பிரபலம்!
- சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாள் இன்று அவரது வெறித்தனமான ரசிகர்களால் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
- பாட்ஷா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த தேவன், சூப்பர் ஸ்டாரின் முதல் காதல் பற்றி கூறியியுள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் இன்று கோலாகலமாக கொண்டடி வருகின்றனர். இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் காதல் பற்றி அவருடன் நடித்த ஒரு நடிகர் தேவன் அண்மையில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
நடிகர் தேவன், பாட்ஷா படத்தில் நாயகி நக்மாவிற்கு அப்பாவாக நடித்திருப்பார். அவர் ராஜியுடனான சந்திப்பின் போது ரஜினி கூறிய அவரது முதல் காதல் பற்றி விவரித்தார்.
ரஜினிகாந்த் பேருந்து நடத்துனராக பெங்களூருவில் பணியாற்றிய போது அவரது பேருந்தில் ஒரு மருத்துவ மாணவி தினமும் பயணிப்பாராம். அந்த பெண் தான் ரஜினியிடம் , நான் உங்கள் நாடகங்களை பார்த்துள்ளேன். நீங்கள் நடிக்க செல்லுங்கள் உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. நிச்சயம் பெரிய நடிகராக வலம் வருவீர்கள் என ரஜினியிடம் கூறினாராம்.
மேலும், ரஜினி சென்னை செல்ல பணம் கொடுத்து உதவினாராம். அவருக்காக விண்ணப்பம் கொடுத்திருந்தாராம். அதன் பின்னர்தான் ரஜினி சென்னை வந்து திரைப்பட கல்லூரியில் சேர்ந்தாராம். இதனை நடிகர் தேவன் ஒரு பேட்டியில் குறிப்பிட்டார். மேலும், இந்த சம்பவத்தை ரஜினி, தேவனிடம் கூறுகையில் ரஜினி மிகவும் வருந்தினாராம். ஏனென்றால் ரஜினி தற்போது வரை அந்த பெண்ணை பார்க்கவில்லையாம். அந்த பெண்ணும் ரஜினியை வந்து பார்க்கவில்லையாம்.