ஆன்மீக பயணத்தை முடித்து சென்னை திரும்பிய ரஜினி ! ரசிகர்கள் உற்சாக வரவேற்பு !
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அவரது மகள் ஐஸ்வர்யா இருவரும் கடந்த ஒரு வாரமாக இமயமலையில் ஆன்மீக பயணத்தை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இவர்கள் நேற்று இரவு சென்னை திரும்பியுள்ளனர்.
ரஜினி இமயமலில் ஆன்மீக பயணத்தின் போது ரிசிகேஷில் உள்ள தயாநிதி மற்றும் பாபா அஸ்ரமத்தில் தனது ரசிகர்களிடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைவரலாகியது.
இந்நிலையில், விமான நிலையத்தில் செய்திகளை சந்தித்த ரஜினி காந்த் தனது பயணம் சிறப்பாக இருந்ததாக தெறிவித்துள்ளார். இவர் அடுத்தாக இயக்குனர் சிவா இயக்கும் படத்தில் கவனம் செலுத்த உள்ளதாக கூறப்படுகிறது.