சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தவறவிட்ட இடத்தை கெட்டியாக பிடித்து வெற்றி பெற்ற தல அஜித்!

Default Image
  • தல அஜித் நடிப்பில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் வரலாறு.
  • இந்த படத்தின் கதையை ரஜினி ஓகே செய்து வைத்திருந்தாராம். அதனை ரஜினி தவறவிட அஜித் நடித்து படம் வெற்றியடைந்தது.

தல அஜித் நடிப்பில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கி இருந்த திரைப்படம் வரலாறு. இந்த படத்தை நிக் ஆர்ட்ஸ் தயாரித்து இருந்தது. இந்த படத்தில் அஜித் மூன்று வேடத்தில் நடித்திருந்தார். இந்த படம் அஜித்திற்கு பெரிய வெற்றி படமாக அமைந்தது. அதிலும் அஜித் பரதநாட்டிய கலைஞராக நடித்து அனைவரது பாராட்டையும் பெற்றார்.

இந்த படத்தின் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் முதலில் இந்த படத்தின் கதையை ரஜினியிடம் கூறியுள்ளார். ரஜியினியும் இந்த கதையை ஓகே செய்து வைத்துள்ளார். ஆனால் சில காரணங்களால் அந்த படத்தில் நடிப்பது தள்ளிப்போயுள்ளது. அதற்கிடையில் ரஜினிகாந்த் சந்திரமுகி படத்தில் நடிக்க சென்றுவிட்டார்.

அதனால் கே.எஸ்.ரவிக்குமார், அடுத்து அஜித்திடம் இந்த கதையை கூறி ஓகே வாங்கி படத்தை தொடங்கி படமும் வெற்றிபெற்றுவிட்டதாம். அதன் பிறகு, ரஜினி, இயக்குரை அழைத்து இந்த கதையை நாம் செய்வோம் என கூறினோமே, ஏன் எனக்கு இந்த கதையை தரவில்லை என ரஜினிகாந்த் கேட்டதாக இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் அண்மையில் ஒரு பேட்டியில் இந்த தகவல்களை தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்