ஏப்ரலில் கட்சி; ஆகஸ்டில் மாநாடு; செப்டம்பரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்..அரசியல் அதிரடி
நடிகர் ரஜினிகாந்த் ஏப்ரலில் கட்சி தொடங்க உள்ளதாகவும், ஆகஸ்டில் மாநாடு,செப்டம்பரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வருவதாக கடந்த 2018ம் ஆண்டில் அறிவித்தார் 2021 சட்டமன்றதேர்தலில் போட்டியிடப்போவதாகஅதில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தனது மன்ற நிர்வாகிகளை சந்திப்பது, நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு வழங்குவது என்று கட்சியை தொடங்குவதற்கான ஆரம்ப பணிகளை நடிகர் ரஜினி தொடர்ந்து வந்த நிலையில் மத்தியில் ஆளும் பாஜகவிற்கு ஆதரவான பதில்கள் மற்றும் பெரியார் குறித்த கருத்து போன்றவற்றால் அவர் சமீபத்தில் விமர்சனத்திற்கு உள்ளானார்.
இந்நிலையில் ரஜினி அரசியல் குறித்து அறிவித்து ஒருவருடம் கழிந்த நிலையில் அதற்கான பணிகளில் நடைபெறுகிறதா.? என்று பலதரப்பில் இருந்து கேள்வி எழுப்பட்டது.மேலும் ரஜினி எப்பொழுது கட்சி துவங்க உள்ளார் என்றெல்லாம் அரசியல் மற்றும் அவருடைய ரசிகர்கள் உட்பட அனைவரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில் ரஜினியின் அரசியல் குறித்து தெரிவித்து வரும் அவருடைய ஆலோசகராக கருதப்படும் தமிழருவி மணியன் அன்மையில் இண்டியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு பேட்டியளித்துள்ளார்.
அதில் ரஜினியின் அரசியல் பற்றி விரிவாக கூறியுள்ளார் அதில் வரும் ஏப்ரல் மாதம் ரஜினி கட்சியைத் தொடங்குகிறார், ஆகஸ்ட் மாதத்தில் பிரமாண்ட மாநாடு நடத்த திட்டமிட்டு பட்டுள்ளதாகவும், இதனைத் தொடர்ந்து செப்டம்பர் மாதத்தில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள ரஜினி இருப்பதாகவும் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் யாரோடு கூட்டணி கொள்வார் என்ற தகவலையும் தெரிவித்துள்ளார். 2014 ஆண்டு எவ்வாறு பாமக, தேமுதிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளை தேசிய ஜனநாயக கூட்டணிக்காக இணைத்தது போன்ற ஒரு வானவில் கூட்டணி ரஜினிக்காக உருவாக்கப்படும். பாஜகவுடன் ரஜினிகாந்த் கூட்டணி அமைப்பாரா? இல்லையா என்பது பற்றி ரஜினியே முடிவெடுப்பார் அதே நேரத்தில் டிடிவி தினகரனுடன் கூட்டணி வைக்கக் கூடாது என்ற முடிவில் ரஜினிகாந்த் உறுதியாக இருக்கிறார் என்று அந்த பேட்டியில் கூறியுள்ளார்.இவருடைய பேட்டியின் மூலமாக அரசியல் களம் சற்று பரபரப்பாக காணப்படுகிறது.