ரஜினி நீங்கள் அரசியலில் நுழையக்கூடாது-அமிதாப்பின் அறிவுரையும்- ரஜினியின் அல்டிமேட் பதிலும்..!
- அரசியலில் நுழைய கூடாது அறிவுரைக் கூறிய அமிதாப்
- அமிதாப் கூறிய அறிவுரைகளில் முதல் இரண்டை மட்டுமே கடைபிடிக்க முடிந்தது அரசியல் குறித்து ரஜினி சூசக பேச்சு
நடிகர் ரஜினி- AR முருகதாஸ் கூட்டணீயில் உருவாகியுள்ள படம் தர்பார் ரசிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்று வருகிறது.
தர்பார் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் நடிகர் அமிதாப்பச்சன் எனக்கு மூன்று அறிவுரைகளை வழங்கினார்.ஆனால் அதில் முதல் இரண்டை மட்டுமே கடைபிடிக்க முடிந்தது என்று கூறினார்.
அமிதாப் ரஜினிக்கு வழங்கிய என்ன அந்த மூன்று அறிவுறை என்றால் உடற்பயிற்சி செய்ய வேண்டும், எப்போதும் பிசியாக இருக்க வேண்டும், அரசியலில் நுழையக் கூடாது என்பதாகும்.
தர்பார் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் நடிகர் அமிதாப்பச்சனின் முதல் இரண்டு அறிவுறைகளை மட்டுமே என்னால் கடைபிடிக்க முடிந்தது.ஆனால் அரசியலில் நுழையக்கூடாது என்ற அறிவுரையை கடைபிடிக்க முடியவில்லை என்று ரஜினி கூறினார்.
இந்த பதிலை அரசியல் நோக்கர்கள் ரஜினி ட்ரைலர் வெளியீட்டு விழாவில் நான் அரசியலில் ஏற்கனவே நுழைந்து விட்டேன் என்று சூசகமாக கூறுவது போல கூறியுள்ளார் என்று தங்களது பார்வையை விரிக்கின்றனர்.