சூப்பர் ஸ்டாரை இயக்க போகும் கெளதம் மேனன்! தயாரிப்பாளர் யார் தெரியுமா?!
இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அடுத்து ரிலீசிற்கு தயாராகியுள்ள திரைப்படம் எனை நோக்கி பாயும் தோட்டா. இந்த படம் தயாராகி ரிலீசாகாமல் வருடக்கணக்கில் கிடப்பில் இருந்து, தற்போது இப்படம் வேல்ஸ் பட நிறுவனம் சார்பாக ரிலீசாக உள்ளது.
இதனை அடுத்து அதே வேல்ஸ் நிறுவனத்திற்கு ஜோஸுவா எனும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் வருண் நாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தை காதலர் தினத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதனை அடுத்து சூர்யா விடம் கெளதம் மேனன் கதை கூறியுள்ளதாகவும், அடுத்து அந்த படத்தை கெளதம் இயக்க வேல்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.
கெளதம் வாசுதேவ் மேனன் சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் கதை கூறியுள்ளதாகவும், அந்த படத்தையும் ஐசரி கணேசன் தயாரிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் எனை நோக்கி பாயும் தோட்டா ரிலீசிற்கு பிறகு அறிவித்து கொள்ளலாம் என ரஜினி தரப்பில் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.