ரஜினி விரைவில் முழுநேர அரசியல் ஊழியராக மாறுவார்!
மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அரசியல் ஊழியராக ரஜினி விரைவில் மாறுவார் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
காற்றழுத்த தாழ்வு உருவாகிறது என முன்கூட்டியே மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஹாம் ரேடியோ மூலம் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
பிற மாநில கடற்பகுதியில் உள்ள தமிழக மீனவர்களுக்கு அந்தந்த மாநிலம் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. தற்போது நடுக்கடலில் தமிழக மீனவர்கள் யாரும் இல்லை. ஒக்கி புயலில் உயிரிழந்த 177 மீனவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் இன்று ரூ.20 லட்சம் நிதி வழங்குகிறார்.
பகுதி நேர அரசியல்வாதியாக இருக்கும் ரஜினி விரைவில் அரசியல் ஊழியராக மாறுவார். முதலில் செஞ்சிக்கோட்டைக்கு ஏறிவிட்டு ஸ்டாலின் செயின்ட் ஜார்ஜ்கோட்டை ஏறட்டும். வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்பது போல் மத்திய அரசு நடந்தால் தமிழக அரசு ஏற்றுக்கொள்ளாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.