#Breaking: ரஜினிக்கு கொரோனா தொற்று இல்லை – தயாரிப்பு நிறுவனம்
நடிகர் ரஜினிகாந்துக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் கொரோனா நெகட்டிவ் என தெரிய வந்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். அன்மையில், கொரோனாவால் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், டிசம்பர் 15 முதல் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், ஐதராபாத்தில் ரஜினி மற்றும் நயன்தாரா நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்த நிலையில், 4 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதனால், படப்பிடிப்பு தற்போதைக்கு நிறுத்தி வைக்கப்பட்ட டுள்ளது. ஐதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் நடந்து வந்த படப்பிடிப்பில் ரஜினி, நயன்தாரா உள்ளிட்டோர் நடித்து வந்தனர்.
இந்நிலையில், ரஜினி சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ரஜினி மற்றும் மற்றவர்கள் நலமாக இருப்பதாகவும், இதனால் அண்ணாத்த படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.