அண்ணாத்த திரைப்படத்தின் இரண்டு அப்டேட்கள் இன்று வெளியாவதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
இயக்குனர் சிறுத்தை சிவா – நடிகர் ரஜினி கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் அண்ணாத்த. இந்த படம் வரும் நவம்பர் மாதம் 4-ஆம் தேதி தீபாவளி அன்று வெளியாகிறது. படத்திற்கான படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், அணைத்து ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த அண்ணாத்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் நாளை வெளியாகும் என நேற்று அறிவிப்பு வெளியானது.
அதன்படி, இன்று காலை 11- மணிக்கு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகிறது. இதனால் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துள்ளனர். மற்றோரு விருந்தாக படத்தின் மோஷன் போஸ்டரும் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது. இதனால் பலத்த எதிர்பார்ப்பு நிலவியுள்ளது.
இந்த திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்துள்ளார். படத்தில் குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, ஜெகபதி பாபு, சூரி, சதிஷ், போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளிலிருந்து தென்தமிழகம் வரை ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில்…
சீனா : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா பொருட்களுக்கு மற்ற…
அகமதாபாத் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி…
சென்னை : தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி கோரிக்கைகள் எழுந்துகொண்டிருந்த சூழலில், இன்று இன்று (ஏப்ரல் 09) தமிழகத்தில் நீட்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகிறது.…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், மருந்துகளுக்கு பெரிய அளவில் இறக்குமதி வரி விதிக்கப்பட உள்ளதாக அறிவித்தது பெரும்…