ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள கோமாளி பட ட்ரெய்லர் தான் இரண்டு நாளாக தமிழ் திரையுலகில் பேசு பொருளாக மாறியுள்ளது. காரணம், படத்தின் ட்ரெய்லரில் உள்ள சிந்திக்க வைக்கும் காமெடி காட்சிகள், அடுத்ததாக ரஜினி அரசியல் குறித்து காமெடியாக உருவாக்கபட்ட காட்சிகள் தான் இந்த சர்ச்சைகளுக்கு காரணம் .
ரஜினி அரசியல் குறித்து 16 ஆண்டுகளாக பேசி வருவது போல காமெடியாக காட்சிப்படுத்தப்பட்ட அந்த காட்சி ட்ரெய்லரில் காண்பிக்கப்பட்டது. இது ரஜினி ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்தியது.
இதனை தொடர்ந்து, அந்த காட்சிக்காக கமஹாசன் தயாரிப்பாளருக்கே போன் செய்து, வருத்தப்பட்டதாக தயாரிப்பாளர் ஒரு வீடியோவில் தெரிவித்தார். பின்னர் அந்த காட்சி நீக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
இது குறித்து பேசிய ஜெயம் ரவி, ‘இந்த ட்ரெய்லரை ரஜினிகாந்த் பார்த்ததாகவும், அவரே எங்கள் குழுவை பாராட்டினார். படம் எப்போது வெளியாகும் என ஆவலுடன் கேட்டறிந்தார்.’ எனவும் ,
‘ இந்த ட்ரெய்லருக்கு பெரிய வரவேற்ப்பு கிடைத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. ட்ரெய்லரின் சில காட்சிகள் ரசிகர்களின் மனதை புண்படுத்தியுள்ளதாக கேள்விப்பட்டேன். நான் தீவிர ரஜினி ரசிகன். ரஜினி படங்களை பார்த்து வளர்ந்தவன்.’ என தெரிவித்தார்.
விழுப்புரம் : இன்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். தற்போது வரை பாமக நிறுவனராக…
சென்னை : அஜித்குமார் நடிப்பில் இன்று குட் பேட் அக்லி திரைப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்த…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க பொருளாதாரத்தை கருத்தில் கொண்டும், உள்நாட்டு உற்பத்தியை பெருக்கும் நோக்கிலும் மற்ற…
சென்னை : அஜித் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. பிப்.6இல்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சமீபத்தில் இஸ்ரேலுக்கு 17%, ஜப்பானுக்கு 24%, கனடாவுக்கு 25%, இந்தியாவுக்கு 26%,பாகிஸ்தானுக்கு…
சென்னை : நடிகர் அஜித் குமார் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் உலகம்…