தமிழ் சினிமாவின் முக்கிய வில்லனுக்காக மீண்டும் ஒன்று சேர உள்ள உலகநாயகன் மற்றும் சூப்பர் ஸ்டார்!

தமிழ் சினிமாவில் தனது வில்லத்தனமானா நடிப்பால் திரையுலகில் அனைவரையும் மிரட்டி, நிஜத்தில் தனது நல்ல உள்ளதால் அனைவரையும் கவர்ந்த நல்ல மனிதர் எம்.என்.நம்பியார். இவருக்கு கடந்த மார்ச் 7ஆம் தேதி 100 வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இதனை அடுத்து அவர் மறைந்த நவம்பர் 19ஆம் தேதி நம்பியாருக்கு பாராட்டு விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாம்.
இந்த நிகழ்ச்சி உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தலைமையில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. உலகநாயகன் பாராட்டுவிழாவில் இருவரும் இணைந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர் அதே போல மீண்டும் இணைந்து பணியாற்றுவார்களா என பொறுத்திருந்து பார்க்கலாம்.