இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த. இந்த மீனா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சதீஷ், சூரி, ஜெகபதி பாபு, போன்ற பல நடிகர்கள், நடிகைகள் நடித்து வருகிறார்கள். சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி. இமான் இசையமைத்து வருகிறார்.
படத்திற்கான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முடித்துவிட்டு சென்னை வந்தனர். மீதமுள்ள படப்பிடிப்பு கொரோனா பரவல் முடிந்தவுடன் கொல்கத்தாவில் நடத்தப்படும் என்று கூறப்படுகிறது. இந்த திரைப்படம் வருகின்ற தீபாவளி அன்று வெளியீடுப்படும் என அறிவிப்பு வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடித்து வரும் திரைப்படம் வலிமை. படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் மே 1 ஆம் தேதி வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் அறிவித்திருந்த நிலையில், தற்போது கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் அதிகரிப்பதன் காரணமாக படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ஒத்திவைப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தார்.
90% படத்திற்கான படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், மீதமுள்ள 10% படப்பிடிப்பை ஸ்பெயின் நாட்டில் வைத்து படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதனால் ஆகஸ்ட் மாதம் படத்தை வெளியீட திட்டமிட்டுருந்த படக்குழு, படப்பிடிப்பு தள்ளிச்சென்றுள்ள காரணத்தால் படத்தை தீபாவளி தினத்தன்று வெளியீட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதே தினத்தில் ரஜினியின் அண்ணாத்த படம் வெளியாகிறது. இதனால் பேட்ட விஸ்வாசம் திரைப்படங்களை தொடர்ந்து அஜித் ரஜினி திரைப்படம் ஒரே நாளில் வெளியாவதால் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு நிலவியுள்ளது.
அமெரிக்கா : அதிபரைத் தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்று அமெரிக்காவின் அதிபரானார்.…
அரியலூர் : இன்று (நவம்பர் 6) புதன்கிழமை அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத்தின் வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு…
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…
சூரசம்ஹாரம் தோன்றிய வரலாறு மற்றும் திருசெந்தூரில் சூரசம்ஹாரம் நடைபெறும் நேரம் என்ன என்பதை பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம்…
வாஷிங்டன் : நடைபெற்று முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில்…
ஃப்ளோரிடா : அமெரிக்காவில் நடைபெற்று வந்த அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று 2-வது முறையாக…