#RRvPBKS: டாஸ் வென்ற ராஜஸ்தான்.. முதலில் பேட்டிங் செய்ய காத்திருக்கும் பஞ்சாப்!
ஐபிஎல் தொடரின் நான்காம் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதவுள்ள நிலையில், இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
2021 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறவுள்ள நான்காம் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் நிலையில், இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன், பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
விளையாடும் வீரர்கள்:
பஞ்சாப் கிங்ஸ்:
கே.எல்.ராகுல் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), மயங்க் அகர்வால், கிறிஸ் கெய்ல், நிக்கோலஸ் பூரன், தீபக் ஹூடா, ஷாருக் கான், ஜெய் ரிச்சர்ட்சன், முருகன் அஸ்வின், ரிலே மெரிடித், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்.
ராஜஸ்தான் ராயல்ஸ்:
ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), மனன் வோஹ்ரா, பென் ஸ்டோக்ஸ், சஞ்சு சாம்சன் (கேப்டன்), ரியான் பராக், சிவம் டியூப், ராகுல் தெவதியா, கிறிஸ் மோரிஸ், ஸ்ரேயாஸ் கோபால், சேதன் சகரியா, முஸ்தாபிசூர் ரஹ்மான்.