மதுபான ஆலைகளை வேறு விதமாக பயன்படுத்த ராஜஸ்தான் அரசு யோசனை.!
உலகம் முழுக்க கொரோனா வைரஸ் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. பல்வேறு நாடுகளில் பொதுமக்கள் வீட்டில் முடங்கி போய் உள்ளனர். இந்தியாவில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸில் இருந்து மக்கள் தங்களை பாதுகாக்க கைகளை சுத்தமாக கழுவ அறிவுறுத்தப்படுகின்றனர். இதனால் கைகளை சுத்தமாக கழுவ 60 சதவீததிற்கும் அதிகமாக ஆல்கஹால் கலந்திருக்கும் சானிடிஸர் உபயோகப்படுத்த அறிவுறுத்தப்படுகின்றனர். இதனால் சானிடிஸர் தேவை அதிகரித்து வருகிறது.
இந்த தேவையை பூர்த்தி செய்ய ராஜஸ்தானில் இயங்கி வரும் 9 மதுபான தொழிற்சாலைகளில் சானிடிஸர்கள் தயாரிக்க தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் சானிடிஸர் தேவை பூர்த்தியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.