பிடித்த வேலை கிடைக்க ராஜராஜேஸ்வரி அம்மனை எப்படி வணங்க வேண்டும் தெரியுமா?!

- தற்போதுள்ள காலகட்டத்தில் பெரும்பாலானோர் தாங்கள் படித்த படிப்பு ஏற்ற வேலை கிடைக்காமல் தடுமாறுகின்றனர்.
- அதனை போக்க ராஜராஜேஸ்வரி அம்மனை தினமும் வணங்கி வந்தாலே நாம் நினைத்த வேலை கிடைக்கும்.
தற்போதைய காலகட்டத்தில் எப்படியாவது படித்து கல்லூரி படிப்பை முடித்து விடுகிறோம். ஆனால் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு சரியான வேலையோ அல்லது நமக்கு பிடித்த துறையில் வேலையும் கிடைப்பது மிகவும் அரிதாகி விடுகிறது. அதனால் பெரும்பாலானோர் கிடைத்த வேலையை செய்து வருகின்றனர். இன்னும் சிலர் தங்களுக்கு பிடித்த துறையில் முயற்சி செய்து வருகின்றனர். இந்த நிலைமை தற்காலத்தில் மிகவும் அதிகமாகி விட்டது.
அந்த பிரச்சனையை தீர்க்க நாம் ராஜராஜேஸ்வரி அம்மனை தினமும் வழிபடவேண்டும். எப்படி ராஜராஜேஸ்வரி அம்மனை வழிபடுவது என இப்போது பார்ப்போம். முதலில் நமது பூஜை அறையில் ராஜராஜேஸ்வரி அம்மனின் புகைப்படத்தை வைக்க வேண்டும். அம்பாளின் முன் இரண்டு நெய் தீபத்தை ஏற்றி வைக்க வேண்டும். பின்னர் குளித்து முடித்து முதலில் விநாயகரை வணங்கிவிட்டு. ராஜராஜேஸ்வரி அம்மனுக்கு வாசனை மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். ஓம் ராஜ ராஜேஸ்வரியை நமக எனும் மந்திரத்தை 108 முறை கூறவேண்டும்.
பின்னர் அம்மனுக்கு தீபாராதனை காட்டி வணங்க வேண்டும். இப்படி வணங்கினால் நம் தகுதிக்கேற்ற வேலை நமக்கு பிடித்த வேலை சொந்த தொழில் என அனைத்தும் நம் விருப்பப்படி நன்மையாக நடக்கும். இதனை வேலை தேடுபவரா அல்லது தொழில் முனைவோரோ செய்ய வேண்டிய அவசியமில்லை. அவர்களுக்காக அவர்களது பெற்றோர்களோ அல்லது மனைவியோ கூட இதனை செய்யலாம். இந்த பூஜை நல்ல பலன் கொடுக்கும்.