பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் சபாநாயகராக ராஜாபர்வேஷ் அஷ்ரப் நியமனம்!

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் சபாநாயகராக ராஜாபர்வேஷ் அஷ்ரப் நியமனம்.
பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் இம்ரான் கான் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. நீண்ட இழுபறிக்கு பின்பு நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில், இம்ரான் கான் தலைமையிலான அரசு கவிழ்ந்தது. இதன்பின் பாகிஸ்தானின் புதிய பிரதமராக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஷெபாஸ் ஷெரீப் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த நிலையில், பாகிஸ்தான் மக்கள் கட்சியைச் சேர்ந்த ராஜாபர்வேஷ் அஷ்ரப் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ளார். பேரவைத் தலைவர் தேர்தலில் அஷ்ரபுக்கு எதிராக வேறு எவரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் அவர் போட்டியின்றித் தேர்வாகியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“இவன் என்ன அழைப்பது என்று இருக்காதீங்க”…மீண்டும் அழைப்பு விடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
March 3, 2025
ரூ.480 கோடியில் சிப்காட்., ஹஜ் இல்லம்., நாகைக்கு 6 திட்டங்களை அறிவித்தார் முதலமைச்சர்!
March 3, 2025