கவிழ்ந்தது ராஜபக்சே அரசு….!நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை …! இலங்கை சபாநாயகர் கரு ஜெயசூர்யா அறிவிப்பு…!
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாததால் கவிழ்ந்தது ராஜபக்சே அரசு.
இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது தொடர்பாக இலங்கை உச்சநீதிமன்றத்தில் எதிர்கட்சிகள் வழக்கு தொடர்ந்தது.அந்த வழக்கை விசாரித்த இலங்கை உச்சநீதிமன்றம், இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது.அதேபோல் ஜனவரி 5 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்ற அறிவிப்புக்கு தடை விதித்தது. இலங்கை நாடாளுமன்றம் நவம்பர் 14ஆம் தேதி கூட்டப்படும் என்ற உத்தரவுக்கு தடை இல்லை என்றும் இலங்கை உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
இந்நிலையில் இலங்கையில் உச்சநீதிமன்ற தீர்ப்பையடுத்து, நாடாளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது என்று சபாநாயகர் கரு.ஜெயசூர்யா அறிவிப்பு வெளியிட்டார்.இதனையடுத்து இன்று காலை கூடியது இலங்கை நாடாளுமன்றம்.
இந்நிலையில் உறுப்பினர்களின் கடும் அமளியால் இலங்கை நாடாளுமன்றம் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இலங்கை நாடாளுமன்றம் கூடிய நிலையில் கடும் கூச்சல் குழப்பம் நிலவியது. கூச்சல் குழப்பத்தை அடுத்து நாடாளுமன்றத்தில் இருந்து ராஜபக்சே வெளிநடப்பு செய்தார்.கூச்சல், குழப்பத்துக்கு இடையே நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது.இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்ட நிலையில், அவர் வெளிநடப்பு செய்தார்.வாக்கெடுப்புக்குப்பின் ராஜபக்சே அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்று சபாநாயகர் கரு.ஜெயசூரியா அறிவித்தார்.எனவே உறுப்பினர்களின் கடும் அமளியால் இலங்கை நாடாளுமன்றம் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.மேலும் பிரதமர் பதவியை இழக்கிறார் ராஜபக்சே.