இளம் நடிகைக்கு போட்டியாக ட்ரெண்டாகும் ராஜமாதா… அந்த புடவையின் ராஜ ரகசியம் தெரியுமா.?!
நடிகை ரம்யா கிருஷ்ணன் பாகுபலி படத்தில் ராஜமாதா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பான் இந்திய நடிகையாக மாறிவிட்டார் என்றே கூறலாம். இதனால் என்னவோ அவருக்கு தொடர்ந்து பல படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வருகிறது.
அதன்படி தற்போது இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பும் விறு விறுபாக நடைபெற்று வருகிறது.
இதையும் படியுங்களேன்- பச்சை சுடியில் பளபளவென ஜொலிக்கும் மிருணாளினி ….வைரலாகும் அட்டகாசமான புகைப்படங்கள்.!
படங்களில் நடிப்பதை தவிர்த்து நடிகை ரம்யா கிருஷ்னன் பிக் பாஸ் ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வருகிறார். இதற்கிடையில் அவ்வப்போது அட்டகாசமாக உடை அணிந்து அதற்கான புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதளபக்கங்களில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ரோஸ் நிற புடவை அணிந்த சில அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். அதில் அவர் அணிந்திருந்த புடவை பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அதற்கு காரணம் என்னவென்றால் அந்த புடவையின் விலை தான்.
ஆம், சுமார் ரூ.1.25 லட்சம் விலையுள்ள அந்த புடவை, ரூபி ரெட் எம்பிராய்டரி ஜார்ஜெட் புடவையாகும். இது தூய பட்டு வெல்வெட் மற்றும் தூய பருத்தி பட்டில் எம்பிராய்டரி டிசைன் கொண்டு செய்யப்பட்டுள்ளதாம். எனவே பலரும் இந்த புடவையை தான் பலரும் ஆன்லைனில் தேடி வருகிறார்கள்.
View this post on Instagram