உழைப்பை மூலதனமாக்கி உயரும் வாழ்வு தாமதமாகலாம், தடைபடாது – கமல்.!
உழைப்பை மூலதனமாக்கி உயரும் வாழ்வு தாமதமாகலாம், தடைபடாது நடிகர் கமல் ட்வீட்.
உழைப்பாளுக்கென்று கொண்டாடும் தினம் மே 1.உழைப்பாளர்கள் தினமான இன்று சமூக வலைத்தளங்களில் பல தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். ஆம் இந்த கொரோனா தொற்று பரவலிலும் குடியரசுத் தலைவர், பிரதமர், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பல சினிமா நட்சத்திரங்கள் என்று பலர் சமூக வலைத்தளங்களில் மே தின வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் தனது மே தின வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
அதில், நாட்டின் பொருளாதாரத்தை கட்டமைத்திடும் ஒவ்வோரு தொழிலாளியின், தனி பொருளாதாரமும் பலப்பட வாழ்த்துக்கிறேன். உழைப்பை மூலதனமாக்கி உயரும் வாழ்வு தாமதமாகலாம், தடைபடாது. இந்நிலை மாறும், தொழிலாளர் வாழ்வு ஏற்றம் பெறும், நம்பிக்கையுடன் என்று பதிவிட்டு தனது மே தின வாழ்த்துக்களை கூறியுள்ளார். தற்போது அந்த பதிவிற்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.
நாட்டின் பொருளாதாரத்தை கட்டமைத்திடும் ஒவ்வொரு தொழிலாளியின், தனி பொருளாதாரமும் பலப்பட வாழ்த்துகிறேன்.
உழைப்பை மூலதனமாக்கி உயரும் வாழ்வு தாமதமாகலாம், தடைபடாது.
இந்நிலை மாறும், தொழிலாளர் வாழ்வு ஏற்றம் பெறும். நம்பிக்கையுடன்..
— Kamal Haasan (@ikamalhaasan) May 1, 2020